2027-ல் இந்தியாவின் ஜிடிபி 7.2% ஆக உயரும்: பொருளாதார ஆய்வில் கணிப்பு

2027-ல் இந்தியாவின் ஜிடிபி 7.2% ஆக உயரும்: பொருளாதார ஆய்வில் கணிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா​வின் பொருளா​தார வளர்ச்சி வரும் 2026-27 நிதி​யாண்​டில் 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்​கும் என்று இஒய் எகானமி வாட்ச் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து இஒய் இந்​தி​யா​வின் தலைமை கொள்கை ஆலோ​சகர் டி.கே.வஸ்​தவா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உலகின் முன்​னணி பொருளா​தார நாடு​களு​டன் இந்​தியா மேற்​கொண்டு வரும் விரி​வான இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தங்​களின் பயனாக நாட்​டின் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்​பு​கள் பிர​காச​மாகி​யுள்​ளன.

இதன் அடிப்​படை​யில், 2026-2027 நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் உண்​மை​யான ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீத​மாக இருக்​கும் என்​பதை நாங்​கள் மதிப்​பிட்​டுள்​ளோம்.2047-ம் ஆண்​டிற்​குள் வளர்ச்​சி​யடைந்த இந்​தியா என்ற இலக்கை எட்ட வேண்​டு​மா​னால், வரி-ஜிடிபி விகிதத்தை அதி​கரிக்க வேண்​டும்.

ஏற்​கெனவே முக்​கிய வரிச் சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு விட்​ட​தால், இனி வரி ஏய்ப்​பைக் குறைத்​து, வரி செலுத்​து​வோரின் எண்​ணிக்​கையை உயர்த்​து​வதன் மூலமே இந்த இலக்கை அடைய முடி​யும். இவ்​வாறு வஸ்தவா கூறியுள்ளார்.

2027-ல் இந்தியாவின் ஜிடிபி 7.2% ஆக உயரும்: பொருளாதார ஆய்வில் கணிப்பு
விஜய் வருகையும், பள்ளி மாணவர்களின் ‘திடீர்’ அரசியல் ஆர்வமும் - ஆரோக்கியமா, ஆபத்தா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in