இந்தியாவின் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும்: ஐஎம்எப் கணிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும்: ஐஎம்எப் கணிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: நடப்பு 2026-27 நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7 சதவீத​மாக இருக்​கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கணித்​துள்​ளது.

அதன் உலகப் பொருளா​தார கண்​ணோட்ட அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: சாதக​மான மக்​கள்தொகை அமைப்​பின் வேகம், பரந்து விரிவடை​யும் உள்​நாட்​டுச் சந்தை மற்​றும் தொடர்ச்​சி​யான கட்​டமைப்​புச் சீர்​திருத்​தங்​களின் ஆதர​வால் இந்​தி​யா​வின் வளர்ச்​சித் திறன் வலு​வடைந்து வரு​கிறது. தொடர் வளர்ச்சி வேகத்​தைப் பிர​திபலிக்​கும் வகை​யில் இந்​தி​யா​வின் மதிப்​பீடு​கள் தற்​போது உயர்த்​தப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, 2026-27 நிதி​யாண்டுக்​கான இந்​தி​யா​வின் ஜிடிபி வளர்ச்சி கடந்த ஜூலையில் அறி​வித்த 6.4 சதவீதத்​தி்லிருந்து 7 சதவீத​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. 2027-28 நிதி​யாண்​டுக்கான ஜிடிபி வளர்ச்​சி​யும் 6.7 சதவீதத்​திலிருந்து 7 சதவீத​மாக உயர்த்தப்பட்​டுள்​ளது.

அமெரிக்​கா-ஈ​ரான் போர் மற்​றும் ரஷ்​யா-உக்​ரைன் போர் போன்ற புவி​சார் அரசி​யல் நிச்​சயமற்ற தன்மைகள் நில​விய​போ​தி​லும், எரிபொருள் தேவை​களுக்​குப் பிற நாடு​களைச் சார்ந்​திருக்​கும் இந்​தி​யா​வுக்​கான வளர்ச்சி மதிப்​பீடு உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தியாவின் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும்: ஐஎம்எப் கணிப்பு
“மிகக் குறைந்த விலையில் உலகத்துக்கு மருந்துகளை வழங்குகிறது இந்தியா” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in