

புதுடெல்லி: இந்தியக் குடும்பங்களின் கைவசம் தற்போது ஒட்டுமொத்தமாக 30,000 டன் தங்கம் கையிருப்பு இருக்கும் என்று சமீபத்திய மதிப்பீடு கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, அதன் மதிப்பு 5 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான (ஜிடிபி) 4.125 டிரில்லியன் டாலரை விட அதிகம்.
இந்திய குடும்பங்களின் கைவசம் உள்ள தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் ரூ.452 லட்சம் கோடியாக உள்ளது. இத்தகவல் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள உலக பொருளாதார பார்வை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் அதிக அளவில் மக்கள் தங்கத்தைக் கையிருப்பாக வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.