‘ஜிடிபியில் ஜப்பானை பின் தள்ளி இந்தியா 4-ம் இடம் பிடிக்கும்’

‘ஜிடிபியில் ஜப்பானை பின் தள்ளி இந்தியா 4-ம் இடம் பிடிக்கும்’
Updated on: 
1 min read

புதுடெல்லி: சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) ஆசியா, பசிபிக் பிராந்திய பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மற்றும் எரிசக்தி தொடர்பான அழுத்தங்கள் நிலவியபோதிலும், 2027-ம் ஆண்டில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகிலேயே 4-வது மிகப் பெரிய பொருளாதாரமாக (ஜிடிபி) இந்தியா உருவெடுக்கும்.

இது சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதார வலிமை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், சர்வதேச அளவில் சவாலான சூழல்கள் நிலவியபோதிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தன்மையைக் கருத்தில் கொண்டு, 2026-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜிடிபியில் ஜப்பானை பின் தள்ளி இந்தியா 4-ம் இடம் பிடிக்கும்’
உள்நாட்டில் தயாரான கடற்படையின் முதல் ஐஎன்எஸ் சமர்தக் கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணித்தார் குடியரசு துணைத் தலைவர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in