சேவைத் துறை வளர்ச்சியால் நாட்டின் ஜிடிபி 7.8% ஆக உயர்வு

சேவைத் துறை வளர்ச்சியால் நாட்டின் ஜிடிபி 7.8% ஆக உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: சேவைத்​ துறை வளர்ச்​சி​யால், 2026-ம் நிதி​யாண்​டின் 4-வது காலாண்​டில் நாட்​டின் ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்ந்​துள்​ளது.

நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) குறித்த அதிகாரப்பூர்வ தகவல்​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன. அதில் கூறியிருப்​ப​தாவது: நாட்​டின் பொருளா​தா​ரம் 2026-ம் நிதியாண்டின் நான்​காவது காலாண்​டில் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்​டி​யுள்​ளது. நாட்​டின் உண்​மை​யான மொத்த உள்​நாட்டு உற்​பத்தி கடந்த ஆண்​டின் இதே காலகட்டத்துடன் ஒப்​பிடு​கை​யில் 7.8 சதவீதம் வளர்ச்​சி​யடை​யும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

சேவைத்​துறை​யின் வளர்ச்​சியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே நேரத்​தில், முழு ஆண்​டுக்​கான வளர்ச்சி 7.7 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. 2026-ம் நிதி​யாண்​டின் 4-வது காலாண்​டில் ஜிடிபி ரூ. 87.77 லட்​சம் கோடி​யாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்​தைய நிதி​யாண்​டின் இதே காலாண்​டில் ரூ.81.40 லட்​சம் கோடி​யாக இருந்​தது. இந்த காலாண்டிற்​கான உத்​தேச ஜிடிபி ரூ. 94.65 லட்​சம் கோடி​யாக மதிப்பிடப்பட்​டு, 9.1 சதவீத வளர்ச்​சி​யைப் பதிவு செய்​துள்​ளது.

முழு நிதி​யாண்​டான 2025-26-ல், உண்​மை​யான ஜிடிபி ரூ.323.12 லட்​சம் கோடியை எட்​டும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இது 2025 நிதி​யாண்​டின் முதலா​வது திருத்​தப்​பட்ட மதிப்​பீ​டான ரூ. 299.89 லட்​சம் கோடி​யுடன் ஒப்​பிடு​கை​யில் 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் காட்​டு​கிறது. உத்​தேச ஜிடிபி முந்​தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதி​கரித்து ரூ. 346.36 லட்​சம் கோடி​யாக மதிப்பிடப்​பட்​டுள்​ளது.

இந்த பொருளா​தார வளர்ச்சி புள்​ளி​ விவரங்​களைக் குறிப்​பிட்​டு, "பொருளா​தார சுனாமி" ஏற்​படும் என்று எதிர்மறையாக எச்சரிக்கை விடுத்​திருந்த மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல்​ காந்​தி​யை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்​சித்​து வருகின்றனர்.

சேவைத் துறை வளர்ச்சியால் நாட்டின் ஜிடிபி 7.8% ஆக உயர்வு
புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு - 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in