‘கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும்’ - லாரி ஃபிங்க் எச்சரிக்கை

‘கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும்’ - லாரி ஃபிங்க் எச்சரிக்கை
Updated on
2 min read

புதுடெல்லி: சர்​வ​தேச சந்​தை​யில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 150 டாலரை தொடு​மா​னால் அது உலகப் பொருளா​தா​ரத்​தில் கடுமை​யான பின் விளைவு​களை ஏற்படுத்​தும் என்று பிளாக்​ராக் தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த வாரம் கச்சா எண்​ணெய் பேரல் ஒன்​றுக்கு 110 டாலரை தாண்​டியபோது, உலக நாடு​களின் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்​தித்​தன. ஒரே வர்த்தகதினத்​தில் முதலீட்​டாளர்​களுக்கு பல லட்​சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்​நிலை​யில், அமெரிக்கா - ஈரான் இடையி​லான பதற்​றம் ஏப்​ரல் மாதம் வரை நீடித்தால், கச்சா எண்​ணெய் விலை பேரல் ஒன்​றுக்கு 150 டாலரைத் தாண்​டும் என்று 'கெப்​ளர்' ஆய்வு நிறு​வனம் கணித்துள்ளது.

இந்த நிலை​யில், பிளாக்​ராக் முதலீட்டு நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரிலாரி ஃபிங்க் கூறியுள்ளதாவது: ஈரான் விவ​காரத்​தில் அச்​சுறுத்​தல் நீடித்து, எண்​ணெய் விலை உச்​சத்​தில் இருந்​தால் அது உலகப் பொருளா​தா​ரத்​தில் ஆழமான மற்​றும் மோச​மான விளைவு​களை ஏற்​படுத்​தும். மேலும், இது ஒரு கடுமையான பொருளா​தா​ரப் பின்​னடைவுக்கு வழிவகுக்கும். உலகப் பொருளா​தா​ரத்​தின் அச்​சாணி​யாக எரிசக்தி திகழ்​கிறது.

போக்​கு​வரத்​து, தொழிற்​சாலை உற்​பத்தி மட்​டுமின்றி உணவுப் பொருட்​களின் விலை​யை​யும் கச்சா எண்​ணெய் விலையே மறை​முக​மாகத் தீர்​மானிக்​கிறது. எண்​ணெய் விலை 150 டாலரை எட்​டும்​போது, அது ஒரு மித​மான மாற்றமாக இருக்​காது; மாறாக அது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்​சி​யாக அமை​யும். பணவீக்​க பாதிப்​பு எண்​ணெய் விலை உயர்​வால் எரிபொருட்​கள் விலை உடனடி​யாக அதி​கரிக்​கும்.

இதன் தொடர்ச்​சி​யாக:

* போக்​கு​வரத்​துச் செலவு அதி​கரிப்​ப​தால் காய்​கறிகளின் விலை உயரும்.

* வாடகைக் கார் கட்​ட​ணங்​கள் மற்​றும் டெலிவரி கட்​ட​ணங்​கள் அதி​கரிக்​கும்.

* சில பகு​தி​களில் மின்​சா​ரக் கட்​ட​ண​மும் உயரும் அபாய​மும் உள்​ளது.

இந்​தியா போன்ற கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்யும் நாடு​களுக்​கு, இது ஒட்​டுமொத்​தப் பொருளா​தா​ரத்​தின் மீதான ‘கூடு​தல் வரி' சுமை​யாக மாறும். குறிப்​பாக, குறைந்த வரு​மானம் கொண்ட குடும்​பத்தினர் இதனால் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​வர்.

வட்டி குறைய வாய்ப்​பில்​லை பணவீக்​கம் உயரும்​போது ரிசர்வ் வங்கி உள்​ளிட்ட மத்​திய வங்​கி​களால் வட்டி விகிதங்​களைக் குறைக்க முடி​யாது.

* வட்டி விகிதக் குறைப்பு தள்​ளிப்​போகும்.

* கடன் வாங்​கு​வது செல​வுமிக்​க​தாக மாறும்.

* வீட்​டுக் கடன் மற்​றும் இதர கடன் தவணை​கள் உச்சத்தில் நீடிக்​கும். இதனால் மக்​கள் செலவு செய்​வதைக் குறைப்​பார்​கள். இதனால் நிறு​வனங்​களின் முதலீடு​களும் முடங்கி வேலை​வாய்ப்​பும் பொருளா​தா​ர​மும் சுணக்கமடை​யும்.

உலகளா​விய வளர்ச்சி பாதிப்​பு

* வரலாற்று ரீதி​யாக, கச்சா எண்​ணெய் விலை உச்சத்தைத் தொட்​ட​போதெல்​ லாம் பொருளா​தார மந்தநிலை ஏற்​பட்​டுள்​ளது. பேரல் விலை 150 டாலர் என்ற நிலை​யில் விமான நிறு​வனங்​கள் தங்​கள் சேவை​களைக் குறைக்​கும் அல்​லது கட்​ட​ணத்தை உயர்த்​தும்.

* எரிபொருள் விலை உயர்​வால் வாக​னங்​களுக்​கான தேவை குறை​யும்.

*சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்​களின்​ லாப வரம்​பு சரி​யும்​.

இவ்​வாறு தலைமைச் செயல் அதி​காரி லாரி ஃபிங்க்​ தெரிவித்​துள்​ளார்​.

‘கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும்’ - லாரி ஃபிங்க் எச்சரிக்கை
திரிணமூல் vs பாஜக: மேற்கு வங்க தேர்தல் களம் 2026 எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in