ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ரூ.19 லட்சம் கோடி செலவு

ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ரூ.19 லட்சம் கோடி செலவு
Updated on
1 min read

ஈரானுக்கு எதிரான போரில் யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் உட்பட உலகின் மிகப்​பெரிய 2 விமானம் தாங்​கிக் கப்​பல்​களை அமெரிக்கா பயன்​படுத்​துகிறது. இந்​தக் கப்​பல்​களை இயக்க ஒவ்வொரு கப்​பலுக்​கும் ஒரு நாளைக்கு தலா ரூ.58 கோடி செலவாகும்.

அது​மட்​டுமல்​லாமல், ராணுவ வீரர்​களைக் குவிப்​ப​தற்​கும் அவர்களின் தேவை​களுக்​கும் இது​வரை சுமார் ரூ.5,500 கோடி செல​விடப்​பட்​டுள்​ள​து தெரிய​வந்​துள்​ளது. முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.6,900 கோடி செல​விட்​டுள்​ள​து தெரிய​வந்​துள்​ளது.

ஈரான் மீதான போர் 2 மாதங்கள் நீடித்தால் ரூ.3.67 லட்​சம் கோடி முதல் ரூ.10.57 லட்​சம் கோடி வரை செல​வாகும் என்று நிபுணர்​கள் கணக்​கிட்​டுள்​ளனர். அதற்கு மேலும், போர் நீடித்​தால், ரூ.18.87 லட்சம்​ கோடி செல​வாகலாம்​ என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தவிர, இஸ்​ரேலுக்கு வழங்​கப்​படும் நிதி உதவியை​யும் கருத்தில் கொண்​டால், இந்த செலவு அமெரிக்க நாட்​டுக்கு மேலும் அதிகரிக்​கும் என்று தெரி​கிறது. அது​மட்​டுமின்றி மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க படைத்​தளங்​கள் பல, ஈரானின் ஏவுகணை தாக்​குதல்​களால் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ரூ.19 லட்சம் கோடி செலவு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் நீடிப்பு: ஈரானில் 1,000-ஐ தாண்டிய உயிரிழப்பு - நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in