ஐடிஎப்சி ரூ.590 கோடி மோசடி: முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது

ஐடிஎப்சி ரூ.590 கோடி மோசடி: முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது
Updated on
1 min read

சண்டிகர்: ஐடிஎப்சி ஃபர்​ஸ்ட் வங்​கி​யில் ஹரி​யானா அரசின் வங்கி கணக்​கில் இருந்து ரூ.590 கோடியை மோசடி செய்​தது தொடர்​பாக முன்​னாள் மேலா​ளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐடிஎப்சி வங்​கி​யில் ஹரி​யானா அரசின் சில கணக்​கு​கள் இருந்தன. இந்த கணக்​கு​களில் உள்ள பணத்தை மற்​றொரு வங்கிக்கு மாற்​றும்​படி ஹரி​யானா அரசு வேண்​டு​கோள் விடுத்தது. அப்​போது​தான், ஹரி​யானா அரசு கணக்​கு​களில் இருந்த பணம் முறை​கேடு செய்​யப்​பட்​டது வங்கி நிர்​வாகத்​துக்கு தெரிந்​தது. இந்த மோசடி தொடர்​பாக ஊழல் தடுப்​புத்​துறை விசாரணையை தொடங்​கியது.

அதில் இந்த மோசடி​யில் மூளை​யாக செயல்​பட்​டது, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்​கி​யில் பணி​யாற்​றிய முன்​னாள் கிளை மேலா​ளர் ரிபவ் ரிஷி என தெரிய​வந்​தது. இவர் 6 மாதத்​துக்கு முன்பு வங்கியில் இருந்து வில​கி​யுள்​ளார்.

இவருடன் இந்த மோசடி​யில் தொடர்​புடைய முன்​னாள் மக்​கள்​ தொடர்பு மேலா​ளர் அபய், ரிபவ் ரிஷி​யின் மனைவி ஸ்வாதி சிங்​ளா, இவரது சகோ​தரர் அபிஷேக் சிங்ளா ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களை ஹரி​யானா லஞ்ச ஒழிப்​புத்​துறை கைது செய்து தொடர் விசாரணை நடத்​தி வருகிறது.

ஐடிஎப்சி ரூ.590 கோடி மோசடி: முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடத்தில் சர்ச்சை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in