முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடம்; தமிழகத்துக்கு 3-வது இடம்

நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்
முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடம்; தமிழகத்துக்கு 3-வது இடம்
Updated on
1 min read

காந்திநகர்: நிதி ஆயோக் முதன்​முறை​யாக வெளி​யிட்​டுள்ள 2026-ம் ஆண்​டிற்​கான முதலீட்​டுக்கு உகந்த மாநிலங்​களின் குறியீட்​டுப் பட்​டியலில் குஜராத் மாநிலம் முதலிடத்​தை​யும், தமிழகம் 3-வது இடத்​தை​யும் பிடித்து சாதனை படைத்​துள்​ளன.

முதலீட்​டுக்கு உகந்த சூழல் குறித்து நாட்​டின் 17 முக்​கிய மாநிலங்களில் விரிவாக ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் குஜராத் மாநிலம் 56.6 புள்​ளி​களு​டன் முதலிடத்​தைப் பெற்​றுள்​ளது. அதைத்​தொடர்ந்து மகா​ராஷ்டிரா (53.7 புள்​ளி​கள்) இரண்​டாம் இடத்தையும், தமிழகம் (53.3 புள்​ளி​கள்) மூன்​றாம் இடத்​தை​யும் பிடித்து சாதனை படைத்​துள்​ளன.

முதல்​வர் பூபேந்​திர படேலின் தலை​மை​யின்​கீழ், வெளிப்படையான, திறமை​யான மற்​றும் முதலீட்​டாளர்​களுக்கு உகந்த வணி​கச் சூழலை உரு​வாக்​கு​வ​தில் குஜ​ராத் அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்​பணிப்பை இந்​தத் தரவரிசை பிரதிபலிப்​ப​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நிதி ஆயோக்​கின் இந்த முதலீட்டு இணக்​கக் குறி​யீ​டானது, மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்கான கொள்கை மற்​றும் நிர்வாகம், உள்​கட்​டமைப்​பு வசதிகள், வணிக வசதி, நிதி மேலாண்மை உள்​ளிட்ட முதலீட்​டுச் சுழற்​சி​யின் ஒவ்​வொரு கட்டத்தை​யும் உள்​ளடக்​கிய 8 முக்​கிய தூண்​களின்​கீழ், 84 குறியீடுகளை அடிப்​படை​யாகக் கொண்டு இந்த 17 மாநிலங்களையும் மதிப்​பீடு செய்​துள்​ளது.

குஜ​ராத் மாநிலத்​தின் கொள்கை ஸ்திரத்​தன்மை மற்​றும் முதலீட்டாளர்​களை மைய​மாகக் கொண்​ட நிர்​​வாகமே அதன்​ மிகப்​பெரிய பலம்​ என்​று இந்​த அறிக்​கை சுட்​டிக்​​காட்​டு​கிறது.

முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடம்; தமிழகத்துக்கு 3-வது இடம்
அனைத்து கட்சிக் கூட்டம்: டிஎம்சி அதிருப்தி எம்.பி.க்களுக்கு தனி இருக்கை முதல் இண்டியா கூட்டணி வெளிநடப்பு வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in