கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6 ஆயிரத்து 300 கோடியாக உயர்வு!

Published on

புதுடெல்லி: கூகுள் நிறு​வனம் தனது சிஇஓ சுந்​தர் பிச்​சை​யின் மொத்த சம்​பளத்தை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு ரூ.6 ஆயிரத்து 300 கோடி​யாக உயர்த்​தி​யுள்​ளது.

அமெரிக்​கா​வின் ஆல்​பபெட் குழுமத்தின் துணை நிறு​வனம் கூகுள். இந்​நிறு​வனத்​தில் தமிழகத்​தைச் சேர்ந்த சுந்​தர் பிச்சை கடந்த 2004-ல் சேர்ந்​தார். க்ரோம் மற்​றும் ஆன்ட்​ராய்ட் உரு​வாக்​கத்​தில் இவர் முக்​கிய பங்​காற்​றி​னார். இதையடுத்து கடந்த 2015-ல் கூகுள் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) ஆனார். இவர் சிஇஓ ஆனதிலிருந்து கூகுள் நிறு​வனத்​தின் சந்தை மதிப்பு 535 பில்​லியன் டாலரில் இருந்து 3.6 டிரில்​லிய​னாக உயர்ந்​தது.

இந்​நிலை​யில், சுந்​தர் பிச்​சை​யின் மொத்த சம்​பளத்தை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு 692 மில்​லியன் டால​ராக (ரூ.6,300 கோடி) கூகுள் நிறு​வனம் உயர்த்​தி​யுள்​ளது. இந்த ஊதி​யத் தொகுப்​பின் பெரும்​பகுதி 126 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள ‘செயல்​திறன் பங்கு யூனிட்' (PSU) மூலம் கிடைக்​கிறது.

இதன் மூலம் உலகிலேயே அதிக சம்​பளம் வாங்​கும் சிஇஓ என்ற பெரு​மையை சுந்​தர் பிச்சை பெற்​றுள்​ளார். மைக்​ரோ​சாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா 96.5 மில்​லியன் டாலர் சம்​பளம் பெறுகிறார். ஆப்​பிள் நிறுவன சிஇஓ டிம் குக்​ சம்​பளம் 74.3 மில்​லியன் டாலர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அண்​மை​யில் 9.8 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள 32,500 பங்​கு​களை சுந்​தர் பிச்சை விற்​றார். தற்​போது இவரும், இவரது மனை​வி​யும் சுமார் 498 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள 1.67 மில்​லியன் கூகுள் பங்கு​களை வைத்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை</p></div>
“அவரும் மனிதர் தானே” - பும்ரா குறித்து நியூஸி. வீரர் கிளென் பிலிப்ஸ் | T20 WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in