தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (மே 5) பவுனுக்கு ரூ.1,440 என குறைந்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என சரிந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த 1-ம் தேதி அன்று பவுனுக்கு ரூ.1,440 என குறைந்தது. அதற்கு மறுநாளான 2-ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 என விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,820-க்கும், பவுனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,10,560-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.196 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.15,077-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.11,530-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
“தமிழக வாக்காளர்களின் புதிய பரிசோதனை முயற்சி இது...” - பிரதமர் மோடி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in