தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1600 உயர்வு!

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.24) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி, பவுனுக்கு ரூ.1,040 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,18,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகி​றது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்து வரு​கிறது.

இந்நிலையில், சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று காலை (ஜன.24) கிராமுக்கு ரூ.70 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்​பனையானது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,16,960-க்கு விற்​பனையானது. மேலும், 24 காரட் சுத்த தங்​கம் பவுன் ரூ.1,27,592-க்கும் விற்​பனையானது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.97,520-க்கும் விற்​பனை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன 24) காலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மீண்டும் மதியம் ரூ.1,040 அதிகரித்துள்ளது. தற்போது, கிராமுக்கு ரூ.130 உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் ரூ. 14,750-க்கும், ஒரு பவுன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ 10,000 உயர்ந்து, ரூ.3,65,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in