தங்கம் விலை மீண்டும் உயர்வு: 2 நாட்களில் ரூ.1,440 அதிகரிப்பு

தங்கம் விலை மீண்டும் உயர்வு: 2 நாட்களில் ரூ.1,440 அதிகரிப்பு
Updated on: 
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (நவ. 27) உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனை சந்தையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.11,600 ஆகவும், ஒரு சவரன்விலை ரூ.480 உயர்ந்து ரூ.92,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளதன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.1,440 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,654 என்ற அளவிலும், ஒரு சவரன் ரூ.1,01,232 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 சரிந்து ரூ.1,65,000-க்கு வந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக அதே விலையில் நீடிக்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இந்த மாற்றங்கள் பதிவாகியுள்ளன. வரும் நாட்களிலும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் என்பதால், நகை வாங்கத் திட்டமிடுவோரும் முதலீட்டாளர்களும் சந்தைப் போக்கைக் கவனித்துச் செயல்படுவது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: 2 நாட்களில் ரூ.1,440 அதிகரிப்பு
அமெரிக்​காவில் இருந்து வெளியேறி வேறு நாட்டில் பணிபுரிய ஊழியர்​களுக்கு ஐபிஎம் உத்தரவு

X