தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,040 என விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த மாதம் (மே) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஜூன் 1 - பவுனுக்கு ரூ.1,040, ஜூன் 4 - பவுனுக்கு ரூ.160, ஜூன் 5 - பவுனுக்கு ரூ.400, ஜூன் 6 - பவுனுக்கு ரூ.1,840, ஜூன் 8 - ரூ.1,040 என தங்கம் விலை குறைந்தது.

இந்த சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,13,600-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,136 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,23,928-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,000 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.95,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. அந்த வகையில் வெள்ளி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி - ட்ரம்ப்புக்கு பின்னடைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in