தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 உயர்வு
Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.21) பவுனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து, ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கத்தின் விலை கடந்த 5-ம் தேதியில் இருந்து பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அதிலும் ஆக.14-ம் தேதியில் இருந்து படிப்படியாக அதிகரித்தது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.21) பவுனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து, ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.250 உயர்ந்து, ரூ.14,850-க்கு விற்கப்பட்டது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.270 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 70 ஆயிரமாகவும் இருந்தது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 உயர்வு
“திமுக ஆட்சியில் மின் துறை கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in