“திமுக ஆட்சியில் மின் துறை கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

“திமுக ஆட்சியில் மின் துறை கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” -  அமைச்சர் நிர்மல் குமார்
Updated on
1 min read

சென்னை: “கடந்த திமுக ஆட்சியில் தமிழக மின் துறை கட்டமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என அமைச்சர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் மின் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் பேசியது: “கடந்த 2021-ம் ஆண்டு முதல் மின் துறைக்கு 4 அமைச்சர்கள் மாறியுள்ளனர். மற்ற துறைகளுக்கு எல்லாம் பணியாளர்கள் அதிகளவில் எடுக்கப்பட்ட நிலையில், இந்த துறையில் ஆட்கள் குறைவாகவே எடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016-21-ம் ஆண்டு காலகட்டத்தில் மின் துறையில் 9,413 பேர் எடுக்கப்பட்ட நிலையில், 2021-26-ல் 343 பேர் மட்டுமே எடுக்கப்பட்டனர். கிட்டதட்ட 15 ஆயிரம் பேர் ஓய்வு பெற்ற நிலையில், 343 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.

துணை மின் நிலையங்களை பொறுத்தவரை, 2016 - 21 காலகட்டத்தில் 359 நிறுவப்பட்டது. 2021 - 26-ல் 122 மட்டுமே நிறுவப்பட்டது. இதுபோன்ற கட்டமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேபோல், 2016-2-ல் 84 ஆயிரம் மின்மாற்றிகளும், 2021-26-ல் 99 ஆயிரம் மின்மாற்றிகளும் வாங்கப்பட்டன. ஆனால், நமக்கான தேவைகள் அதிகமாக உள்ளது.

தற்போதுள்ள சூழலில் இந்த துறைக்கு, 593 துணை மின் நிலையங்கள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக 3 முறை ஆய்வு செய்து, இந்த ஆண்டு மட்டும் உடனடியாக 209 துணை மின் நிலையங்களை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அடுத்து வரும் ஆண்டுகளில் 263 துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

“திமுக ஆட்சியில் மின் துறை கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” -  அமைச்சர் நிர்மல் குமார்
“ஜெயலலிதா உருவச் சிலை முறையாக பராமரிப்பு” - பேரவையில் அமைச்சர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in