தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
Updated on: 
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (நவ.10) பவுனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. கடந்த இரண்டு வர்த்தக நாளாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.160 என்றும், நேற்று (திங்கள்கிழமை) பவுனுக்கு ரூ.760 என்றும் உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

இன்றைய விலை விவரம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,210-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,05,680-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.392 குறைந்து, ஒரு பவுன் 1,15,288-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ ரூ.2,05,000-க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கவாஜா கருத்துக்கு வார்னர் ஆதரவு - பின்னணி என்ன?

X