2025-26-ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்​சம் கோடி தாண்டும்

2025-26-ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்​சம் கோடி தாண்டும்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த மார்ச் மாத்​துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்​டில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்​லியன் டாலரை (சு​மார் ரூ. 8.56 லட்​சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்​ள​தாக மத்​திய அரசின் உயர் அதி​காரி ஒரு​வர் நேற்று தெரிவித்​தார்.

இது குறித்து மத்​திய தொழில் மற்​றும் உள்​நாட்டு வர்த்தக மேம்​பாட்​டுத் துறை​யின் செய​லா​ளர் அமர்​தீப் சிங் பாட்​டியா செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: அந்​நிய நேரடி முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக மத்​திய அரசு தொடர்ந்து பல்​வேறு சீர்​திருத்த நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

இதன் பலனாக, கடந்த 2025 ஏப்​ரல் முதல் 2026 பிப்​ர​வரி வரையிலான 11 மாத காலத்​தில் இந்​தி​யா​வின் அந்​நிய நேரடி முதலீடு 88 பில்​லியன் டாலரைக் கடந்​துள்​ளது. தற்​போது மார்ச் மாத புள்​ளி​விவரங்​கள் கணக்​கிடப்​பட்டு வரும் நிலை​யில், கடந்த 2025-26 முழு நிதி​யாண்​டில் இந்த முதலீடு 90 பில்​லியன் டாலரை எட்​டும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அரசின் பொருளா​தா​ரச் சீர்​திருத்த நடவடிக்​கைகள், பல்​வேறு நாடு​களு​டன் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தங்​கள் மற்​றும் நாட்​டின் வேக​மான பொருளா​தார வளர்ச்சி ஆகியவை அதி​கள​வில் வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்க்​கப் பெரிதும் உதவி வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

2025-26-ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்​சம் கோடி தாண்டும்
திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதான விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in