உள்​நாட்​டு, சர்​வ​தேச விமான கட்டணங்கள் உயர்வு; முன்​ப​திவு செய்திருந்தால் கட்டண உயர்வு பொருந்​தாது

உள்​நாட்​டு, சர்​வ​தேச விமான கட்டணங்கள் உயர்வு; முன்​ப​திவு செய்திருந்தால் கட்டண உயர்வு பொருந்​தாது
Updated on
1 min read

சென்னை: அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் போர் காரண​மாக உள்நாட்​டு, சர்​வ​தேச விமான கட்​ட​ணங்​கள் உயர்த்​தப்​பட்டுள்ளன.

அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் போர் காரண​மாக, எரி பொருட்களின் விலை, பல மடங்கு அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, விமானங்​களுக்கு பயன்​படுத்​தும் எரிபொருள் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ள​தால், ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமான நிறு​வனங்​கள், பயணி​களுக்​கான விமான டிக்​கெட் கட்டணங்​களை உயர்த்​தி​யுள்​ளன. இந்த கட்டண உயர்வு இன்று (8ம் தேதி) முதல் அமலுக்கு வரு​கிறது.

ஏற்​கெ​னவே, கடந்த மார்ச் 12-ம் தேதி விமான டிக்​கெட் கட்டணங்கள் உயர்த்​தப்​பட்ட நிலை​யில், 2-வது முறை​யாக கட்டண உயர்​வால் பயணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். சிவில் விமான போக்​கு​வரத்து துறை அமைச்​சகம், உள்​நாட்டு விமான கட்​ட​ணங்​களை 25 சதவீதத்​துக்கு மேல் உயர்த்த கூடாது என்று கட்டுப்​பாடு​களை விதித்​துள்​ளது. எனவே, உள்​நாட்டு விமான பயணங்​களுக்கு கட்டண உயர்வு ரூ.299 முதல்​, ரூ.899 வரை அதிகரித்​துள்​ளது.

அதன்​படி, முதல் 500 கிலோ மீட்​டர் வரை ரூ.299, 501-ல் இருந்து 1,000 கிலோ மீட்​டர் வரை ரூ.399, 1,001 முதல் 1,500 கிலோ மீட்​டர் வரை ரூ.549, 1,501 முதல் 2,000 கிலோ மீட்​டர் வரை ரூ.749, 2,000 கிலோ மீட்​டருக்கு மேல் ரூ.899 என கட்​ட​ணம் உயர்ந்​துள்​ளது.

சர்​வ​தேச விமானங்களுக்கான கட்டண உயர்​வுக்கு, சிவில் விமான போக்​கு​வரத்துத் துறை கட்​டுப்​பாடு எது​வும் விதிக்​காத​தால், சர்​வ​தேச விமான கட்​ட​ணங்​கள் அதி​க​மாக உயர்த்தப்பட்டுள்​ளன. சார்க் நாடு​களுக்கு (வங்கதேசம் தவிர) விமான கட்​ட​ணங்​கள் (24 அமெரிக்க டாலர்) ரூ.1,992 உயர்த்தப்பட்டுள்​ளது. மேற்​காசி​யா, மத்​திய கிழக்கு நாடு​களுக்கு (50 அமெரிக்க டாலர்) ரூ.4,150, சீனா மற்​றும் தென் கிழக்கு ஆசிய நாடு​களுக்கு (சிங்​கப்​பூர் தவிர) (100 அமெரிக்க டாலர்) ரூ.8,300 கட்ட​ணம் உயர்ந்​துள்​ளது.

ஐரோப்​பிய நாடு​கள், ஆஸ்​திரேலி​யா, வட அமெரிக்கா நாடுகளுக்கான கட்டண உயர்வு வரும் 10ம் தேதி அதி​காலை முதல் அமலுக்கு வரு​கிறது. ஐரோப்​பிய நாடு​களுக்கு (205 அமெரிக்க டாலர்) ரூ.17,015, வட அமெரிக்க நாடு​களுக்கு (280 அமெரிக்க டாலர்) ரூ.23,240, ஆஸ்​திரேலியா நாட்​டுக்கு (280 அமெரிக்க டாலர்) ரூ.23,240 கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

பயண தேதி, இடம் வங்​கதேசம், சிங்​கப்​பூர், ஜப்​பான், ஹாங்​காங், தென்​கொரியா உள்​ளிட்ட பகு​தி​களுக்​கான கட்டண உயர்​வு​கள் பின்​னர் அறிவிக்​கப்​பட​வுள்​ளன. ஏர் இந்​தி​யா, ஏர் இந்​தியா எக்ஸ்பிரஸ் விமானங்​களில் பயணிக்க, முன்​ன​தாகவே டிக்கெட்டுகள் முன்​ப​திவு செய்து இருந்த பயணி​களுக்​கு, இந்த கட்டண உயர்வு பொருந்​தாது. அவர்​கள் பழைய கட்டண டிக்கெட்களில் பயணிக்​கலாம். ஆனால் பயண தேதி, அல்​லது பயணம் செய்​யும் இடங்​களை மாற்​றி​னால்​, புதி​ய கட்​ட​ணம்​ வசூலிக்​கப்​படும்​ என்​று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்​நாட்​டு, சர்​வ​தேச விமான கட்டணங்கள் உயர்வு; முன்​ப​திவு செய்திருந்தால் கட்டண உயர்வு பொருந்​தாது
ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in