ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?

சட்​டப்​பேர​வைத் தொகுதி வரிசை​யில் 20-வது இடத்​தில் உள்​ளது ஆயிரம் விளக்கு தொகு​தி. மறைந்த முன்​னாள் முதல்​வர்​கள் கருணாநிதி (கோ​பாலபுரம்), ஜெயலலிதா (போயஸ்​கார்​டன்) ஆகியோர் இத்​தொகு​தியை சேர்ந்தவர்களே. முக்​கிய இடங்​களான அமெரிக்க துணை தூதரகம், வள்​ளுவர் கோட்​டம், அண்ணா (ஜெமினி) மேம்பாலம் ஆகிய​வை​யும் இத்​தொகு​தி​யில் அமைந்​துள்​ளன.

கடந்த 1952 ஆண்டு நடை​பெற்ற சட்​டபேர​வைத் தேர்​தலில் ஆயிரம் விளக்கு தொகுதி உரு​வாக்​கப்​பட்​டது. ராயப்பேட்டை, நுங்​கம்​பாக்​கம், சூளைமேடு, மாகலிங்கபுரம், தியாக​ராயநகர், மாம்​பலம், ராஜா அண்ணா​மலைபுரம், தேனாம்​பேட்​டை, கோபாலபுரம் ஆகியவை இத்​தொகு​தி​யில் அடங்​கி​யுள்​ளன.

இத்​தொகு​தி​யில் தாழ்த்​தப்​பட்ட மக்​கள் 40 சதவீத​மும், வன்னியர் 30 சதவீத​மும், முஸ்​லிம்​கள் 10 சதவீத​மும் முதலியார் சமூகத்​தினர் ஓரள​வும் இருக்​கின்​றனர். எனவே, தாழ்த்​தப்​பட்ட மக்​களும், வன்​னியர்​களுமே வெற்​றியை நிர்​ண​யிக்​கும் சக்​தி​யாக உள்​ளனர்.

இது​வரை இத்தொகு​தி​யில் நடந்த தேர்​தல்​களில் திமுக 11 முறை​யும் அதி​முக 4 முறை​யும் வெற்​றி​வாகை சூடியுள்ளது. 1989-ம் ஆண்டு திமுக வேட்​பாளர் மு.க.ஸ்​டா​லின் வெற்றி வாகை சூடி​னார்.

அதன் பிறகு, 1996, 2001, 2006-ம் ஆண்டு தேர்​தல்​களில் திமுக வேட்​பாளர் மு.க.ஸ்​டா​லின் ஹாட்​ரிக் வெற்​றியை பதிவு செய்​தார். கடந்த 2021-ம் ஆண்டு தேர்​தலில் திமுக வேட்பாளர் எழிலன் நாக​நாதன் வெற்றி பெற்​றார்.

தொகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​கள்

சென்னை ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் மற்​றும் வாகன நிறுத்​தப் பிரச்​சினை ஆகியவை முக்​கிய பிரச்​சினை​களாக உள்​ளன. இதுத​விர, கொசுத் தொல்​லை, பாதாள சாக்​கடை​யில் ஏற்​படும் அடைப்​பு, குடிநீர் பிரச்​சினை, மழைநீர் வடி​கால் அமைப்​ப​தற்​காக, பல இடங்​களில் தோண்​டப்​பட்ட பள்​ளங்​களை முறை​யாக மூடப்​ப​டாதது, ஆங்​காங்கே குண்​டும் குழி​யு​மாக காணப்படும் சாலைகள் போன்​றவை​யும் முக்​கிய பிரச்சினை​களாக உள்​ளன.

வேட்​பாளர்​கள் பின்​புலம்

இத்​தொகு​தி​யில் தற்​போதைய எம்​எல்ஏ வான திமுகவைச் சேர்ந்த டாக்​டர் எழிலன் நாக​நாதன் மீண்​டும் களம் இறங்​கு​கிறார். திமுக மருத்​து​வரணி செய​லா​ள​ரான இவர், முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் தனிமருத்​து​வ​ராக இருந்தவர்.

இவர் கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், 32,462 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் அதி​முக​வின் ஆதரவு பெற்ற பாஜக வேட்​பாள​ரான நடிகை குஷ்புவை தோற்​கடித்​தார். திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினின் தேர்​தல் வாக்​குறு​தி​களை நம்பி மீண்​டும் களம் இறங்கி உள்​ளார்.

அதி​முக சார்​பில் போட்​டி​யிடும் முன்​னாள் அமைச்​சர் வளர்​மதி ஏற்​க​னவே இத்​தொகு​தி​யில் வெற்றி பெற்​றவர். மேலும், தொகுதி மக்​களிடம் நன்கு தெரிந்த முக​மாக இருக்​கிறார். சாதாரண மக்​களிடம் நேரிடை​யாக பழகக்​கூடிய​வ​ராக இருப்​ப​தால், இது இவருக்கு பெரிய பலமாக இருக்​கிறது.

இதுத​விர, தவெக சார்​பில் களம் இறங்​கும் ஜேசிடி பிர​பாகர், நீண்ட அரசி​யல் அனுபவ​மிக்​கவர். முன்பு அதி​முக சார்​பில் வில்​லி​வாக்​கம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு இரு​முறை வெற்றி பெற்​றவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்​னீர்​செல்​வம் அணிக்கு சென்​றார். இதன்​பிறகு, ஓ.பன்​னீர்​செல்​வம் மீது ஏற்​பட்ட அதிருப்​தி​யால், கடந்த ஜனவரி​யில் இருந்து தவெக-​வில் இணைந்​தார்.

தற்​போது, தவெக சார்​பில் களம் இறங்கி உள்​ளார். நாம் தமிழர் கட்சி சார்​பில் திரைப்பட இயக்​குநர் களஞ்​சி​யம் போட்​டி​யிடு​கிறார். இந்த முறை 4 முனை போட்டி நிலவுவதால், யார் வெற்றி பெற்​றாலும், அவர்​களது வெற்றி எளிதாக இருக்​காது என்றே கருதப்​படு​கிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 73,500

பெண் - 80,343

மூன்​றாம் பாலினத்​தவர் - 65

மொத்த வாக்​காளர்கள் - 1,53,908

ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள் - முந்துவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in