மாதாந்திர ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி சலுகை நிறுத்தம்

மாதாந்திர ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி சலுகை நிறுத்தம்
Updated on
2 min read

கோவை: மாதாந்திர ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி என்ற சலுகை நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனத்தினர் இன்று (ஜூன் 29) மதியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை ஆவின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 2.30 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் உபபொருட்கள் 650 சில்லறை பால் முகவர்கள் மூலம் கோவையில் விற்கப்படுகிறது. ஆவின் விற்பனை பிரிவு கைபேசி செயலியும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட பால் முகர்வோர்களுக்கு தங்குதடையின்றி பால் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பின்வரும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, கோவை மாவட்ட நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் மாதாந்திர பால் அட்டை பிரதி மாதம் 11-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் பால் அட்டைக்கான தொகையினை கைபேசி செயலி மூலம் மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ளவும்.

ஆவினின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு, கோவையில் நுகர்வோர்களுக்கு மாதாந்திர பால் அட்டை தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது நிறுத்தம் செய்யப்படுகிறது. மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே (எம்ஆர்பி) விற்பனை செய்யப்படும். ஒன்றிய முகவர்கள் அனைவரும் வரும் 1-ம் தேதி முதல் பால் தேவை பட்டியல் பாக்கெட் கணக்கிற்கு மாற்றாக, பால் பெட்டிகள் அடிப்படையில் (ஒரு பெட்டி - 12 லிட்டர்) தேவைப்பட்டியல் வழங்கப்படும்.

கோவை மாவட்ட நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு குறித்த நேரத்தில் பால் விநியோகம் செய்யும் பொருட்டு, அனைத்து பால் முகவர்களும் தினசரி காலை மற்றும் மாலை வேலைக்கான தேவைப்பட்டியலை முந்தைய தினம் மாலை 4 மணிக்குள் பணம் செலுத்தி பதிவு செய்து, உறுதி செய்ய வேண்டும். முகவர்களுக்கு பால் தேவைப்பட்டியல் தரகுத்தொகை கழித்து பணம் செலுத்தும் வசதி அமல்படுத்தப்படும்.

இதைத் தொடர்ந்து அச்செயலியின் மூலம் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து முகவர்களும் தினசரி தேவைப்பட்டியல் மற்றும் அதற்கான தொகையினை ஆவின் விற்பனை பிரிவு செயலியின் மூலமே மேற்கொள்ள வேண்டும். முகவர்கள் அனைவரும் வரும் 1-ம் தேதி முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விற்பனை பிரிவு மென்பொருள் செயலி மூலமாக தங்களது பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவைபட்டியலை உறுதிசெய்து, செயலி மூலம் தொகையினை செலுத்தி தங்களது தேவைபட்டியலை பதிவிட வேண்டும். அதற்கு ஏற்ப தங்களுடைய வங்கி கணக்கில் தொகையை இருப்பு வைத்துக்கொள்ள தேவையான முன் ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி சலுகை நிறுத்தம்
வெனிசுலா: இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in