மிசோரமில் ரூ.189.79 கோடியில் இஞ்சி மேம்பாட்டுத் திட்டம்

மிசோரமில் ரூ.189.79 கோடியில் இஞ்சி மேம்பாட்டுத் திட்டம்
Updated on
1 min read

அய்சால்: மிசோரம் மாநிலத்​தில் இஞ்சி சாகுபடி மற்​றும் அதன் மதிப்​புக் கூட்​டப்​பட்ட தயாரிப்​பு​களை மேம்​படுத்​தும் நோக்​கில், ரூ.189.79 கோடி மதிப்​பிலான ‘மிசோரம் இஞ்சி இயக்​கம்’ எனும் புதிய திட்​டத்தை மத்​திய அரசு தொடங்​கி​யுள்​ளது.

மத்​திய வடகிழக்கு பிராந்​திய மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஜோதி​ரா​தித்ய சிந்​தியா, மிசோரம் முதல்​வர் லால்​டுஹோமா ஆகியோர் காணொலி வாயி​லாக இத்​திட்​டத்தை தொடங்கி வைத்தனர்.

இது குறித்து மத்​திய அமைச்​சர் ஜோதி​ரா​தித்ய சிந்​தியா கூறியதாவது: மிசோரம் இஞ்​சி​யில் 6 முதல் 8 சதவீதம் வரை ‘ஒலியோ ரெசின்’ சத்து உள்​ளது. இது உலக சராசரி​யான 3 சதவீதத்தை விட மிக அதி​கம். ஆனால், சர்​வ​தேச சந்​தை​யில் ஒரு கிலோ இஞ்சி ரூ.500-க்கு மேல் விற்​பனை​யாகும் நிலை​யில், விவசா​யிகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை மட்​டுமே வரு​மானம் பெறுகின்​றனர்.

எனவே, இடைத்​தரகர்​களை அகற்​றி, விவ​சா​யிகளுக்கு நேரடிப் பலன் கிடைக்​கச் செய்​வதே மிசோரம் இஞ்சி இயக்​கத்​தின் நோக்கம். இதன் மூலம் விவ​சா​யிகளின் வரு​வாய் 6 மடங்கு அதிகரிக்கும். இவ்​வாறு சிந்​தி​யா கூறி​னார்​.

மிசோரமில் ரூ.189.79 கோடியில் இஞ்சி மேம்பாட்டுத் திட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in