நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஷ்தில் ஏவுகணைகள் கொள்முதல் செய்ய ரூ.5,083 கோடியில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஷ்தில் ஏவுகணைகள் கொள்முதல் செய்ய ரூ.5,083 கோடியில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் கடல்சார் மற்றும் வான் பாது​காப்பு திறன்​களை வலுப்​படுத்த ரூ.5,083 கோடி மதிப்​பிலான 2 ஒப்பந்தங்களில் கையெழுத்​திட்​ட​தாக பாது​காப்பு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

இது குறித்து பாது​காப்பு அமைச்​சகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடலோர காவல்​படைக்கு 6 நவீன இலகுரக ஹெலி​காப்​டர்​களும் (ஏஎல்​எச்) கடற்​படைக்கு தரையில் இருந்து வான் இலக்​கு​களை செங்​குத்​தாக சென்று தாக்கும் ஷ்தில் ஏவு​கணை​களும் கொள்​முதல் செய்ய ரூ.5,083 கோடி மதிப்​பிலான 2 ஒப்​பந்​தங்​களில் பாது​காப்பு அமைச்​சகம் செவ்​வாய்க்​கிழமை கையெழுத்​திட்​டது.

ஹிந்​துஸ்​தான் ஏரோ​நாட்​டிக்ஸ் நிறு​வனத்​துட​னான ஏஎல்​எச் ஒப்​பந்​தம் ரூ.2,901 கோடி மதிப்​பிலானது. இந்த ஒப்​பந்​தம் செயல்பாட்டு உபகரணங்​கள், பொறி​யியல் ஆதரவு மற்​றும் செயல்​ திறன் அடிப்​படையி​லான தளவாட ஆதரவை உள்ளடக்கியது. இது​போல் ஷ்தில் ஏவு​கணை​களுக்​கான ஒப்பந்தம் ரஷ்​யா​வின் ரோசோ​போரோனெக் ஸ்போர்ட் நிறுவனத்துடன் கையெழுத்​தானது. இது, ரூ.2,182 கோடி மதிப்பிலானது.

கடலோர காவல் படை​யில் புதிய இலகுரக ஹெலி​காப்​டர்​கள் சேர்ப்​பது அதன் திறனை கணிச​மாக அதி​கரிக்​கும். இந்த இரட்டை இன்​ஜின் ஹெலி​காப்​டர்​கள் தற்​போது இயக்​கப்​படும் ஹெலி​காப்​டர்​களை விட மேம்​பட்ட அதிநவீன அம்​சங்​களை கொண்​டிருக்​கும். மேலும் கரையோர விமான தளங்​கள் மற்​றும் கடலில் போர்க் கப்​பல்​களில் இருந்து பரந்த அளவில் கடல்​சார் பாது​காப்பு பணி​களை மேற்​கொள்​ளும் திறனை கொண்டிருக்கும்.

இது​போல் முன்​னணி போர்க் கப்​பல்​களின் வான் பாது​காப்பு திறன்​களை ஷ்தில் ஏவு​கணை​கள் கணிச​மாக மேம்​படுத்​தும். மேலும் இந்​திய கடற்​படை தளங்​களில் உள்ள வான் பாது​காப்பு கட்​டமைப்பை வலுப்​படுத்​தும். விரை​வாக எதிர்​வினை​யாற்​று​தல், அனைத்து வானிலை​யிலும் செயல்​படு​தல் உள்​ளிட்ட சிறப்பு அம்சங்​களை இது கொண்டிருக்கும். இந்​தியா - ரஷ்யா இடையிலான பாது​காப்பு ஒத்துழைப்பை இது மேலும் வலுப்படுத்தும். இவ்​வாறு அந்​த அறிக்கை​யில்​ கூறப்பட்​டுள்​ளது.

நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஷ்தில் ஏவுகணைகள் கொள்முதல் செய்ய ரூ.5,083 கோடியில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் பணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: திமுக கவுன்சிலர் நண்பருடன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in