லக்னோ: ‘தன்தேரஸ்’ பண்டிகைக்கு ரூ.67 கோடி தங்கம், ரூ.20 கோடி வெள்ளி விற்பனை

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் தன்தேரஸ் பண்டிகையில் நகைக்கடை வணிகர்கள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அங்கு ரூ.67 கோடி தங்கமும், ரூ.20.16 கோடி வெள்ளியும் விற்பனையாகி உள்ளன.

வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் தன்தேரஸ் நாள், நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதில், உ.பி-யின் தலைநகரான லக்னோ முழுவதும் உள்ள நகை மற்றும் பாத்திரக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த தன்தேரஸ் நாளில் தங்கம் மற்றும் பாத்திரங்களை வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதனால், மக்கள் ஆர்வத்துடன் கடைகளைக்குச் சென்று இவற்றை வாங்கினர்.

இதன் விற்பனை குறித்து லக்னோ தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் அதீஷ் ஜெயின் கூறுகையில், “லக்னோவில் 67 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்கமும், 20.16 கோடி ரூபாய் மதிப்பிலான 1,050 கிலோ வெள்ளியும் விற்பனையாகியுள்ளன.

தன்தேரஸ் வணிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. லக்னோவில் சுமார் 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் நடைபெற்றுள்ளது.

இதைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தன்தேரஸ் பண்டிகையின் போது வணிகம் 15 முதல் 20 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

நகைக்கடைகளில், வாடிக்கையாளர்கள் கனமான நகைகளுக்குப் பதிலாக, காதணிகள், வளையல்கள் மற்றும் சங்கிலிகள் போன்ற எடை குறைந்த நகைகளையே அதிகம் விரும்பி வாங்கினர்.

தன்தேரஸ் பண்டிகையின் போது செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு பாரம்பரியமாக வாங்கப்படும் வெள்ளி நாணயங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பாத்திரச் சந்தையிலும் விறுவிறுப்பான வர்த்தகம் காணப்பட்டது. அங்கு எஃகு வீட்டு உபயோகப் பொருட்களுடன் பித்தளை மற்றும் செப்புப் பொருட்களும் அதிக அளவில் விற்பனையாயின.

லக்னோ பாத்திர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஹரிஷ் சந்திர அகர்வால், “தன்தேரஸ் அன்று நகரில் பாத்திர வணிகம் சுமார் 1,000 கோடி ரூபாயாக இருந்திருக்கலாம். மதிய வேளையில் சந்தை விறுவிறுப்பாகத் தொடங்கியது.

நாள் முழுவதும் நீடித்த மக்கள் கூட்டத்திற்கு தன்தேரஸின் வெள்ளிக்கிழமை விற்பனைக்குச் சாதகமாக அமைந்தது. ஏனெனில், சனிக்கிழமைகளில் சில உலோகப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கும் வழக்கம் உள்ளது.

விலை உயர்ந்த உலோகங்களின் விலை குறைந்ததால், அதிக விலையில் இருந்தபோது வாங்குவதைத் தள்ளிவைத்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது, இது விற்பனை அதிகரிக்க உதவியது” என்று தெரிவித்தார்.

அதேபோல், இருசக்கர வாகனப் பிரிவில் சுமார் ரூ.80 கோடிக்கும், நான்கு சக்கர வாகனப் பிரிவில் சுமார் ரூ.400 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்றுள்ளன.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
போர் தொடங்கியபோது இருந்ததை விட இப்போது பலமாக இருக்கிறோம்: ஈரான் ராணுவம்

X