ரூ.2,000+ யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு பரிசீலனை

பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என தகவல்
ரூ.2,000+ யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு பரிசீலனை
Updated on
1 min read

புதுடெல்லி: யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் மேற்​கொள்​ளப்​படும் வணி​கப் பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் (எம்​டிஆர் - வணி​கர் தள்​ளு​படி வீதம் ) விதிக்க மத்​திய அரசு அனுமதி அளிக்​கக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்த வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​வில் வங்​கி​களும் சேவை நிறு​வனங்​களும் மின்​னணு பரிவர்த்​தனை​களுக்கு கட்​ட​ணம் வசூலிப்​ப​தற்​கான தடையை நீக்க முன்​மொழிந்​துள்​ளார். இதையடுத்​து, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் விதிக்க வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அரசு புள்​ளி​விவரங்​களின்​படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்​ணிக்​கை​யில் ரூ.2,000-க்கு மேற்​பட்ட பரிவர்த்​தனை​களின் பங்கு 5% மட்​டுமே. ஆனாலும், இவை மொத்த பரிவர்த்​தனை மதிப்​பில் 65% பங்​கைக் கொண்​டுள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கிரெடிட் கார்​டு​களைப் போல் அல்லாமல், இதில் நிதி மூலதனச் செலவு இல்​லாத​தால், வசூலிக்கப்​படும் கட்​ட​ணத்​துக்கு ஒரு குறிப்​பிட்ட உச்​சவரம்பு நிர்ண​யிக்​கப்பட வாய்ப்​புள்​ளது.

அதி​காரி​களின் கூற்​றுப்​படி, ரூ.2,000-க்கு உட்​பட்ட பரிவர்த்​தனைகளுக்​குக் கட்​ட​ணம் இல்​லை. இதனால் காய்​கறி, பால், மளிகைப் பொருட்​கள் வாங்​கு​வது மற்​றும் ஆட்​டோ, டாக்சி கட்டணம் செலுத்​து​வது போன்ற அன்​றாட சிறு செல​வு​கள் இதனால் பாதிக்​கப்படாது. எனவே, 95% பரிவர்த்​தனை​கள் இந்த கட்டண வரம்​பிற்​குள் வராது. மேலும், வணி​கர்​கள் இந்​தக் கட்டணத்தை வாடிக்​கை​யாளர்​கள் மீது சுமத்​து​வார்​களா அல்​லது தாங்​களே ஏற்​றுக்​கொள்​வார்​களா என்​பது அவர்​களின்​ விருப்பத்தைச்​ சா​ர்​ந்​தது.

ரூ.2,000+ யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு பரிசீலனை
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற 3 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்: மத்திய அரசு ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in