பிஎம்டபிள்யு எக்ஸ்1 வீல்பேஸ் கார் இந்​தி​யா​வில் அறிமுகம்

சென்னை தொழிற்சாலையில் தயாராகிறது
பிஎம்டபிள்யு எக்ஸ்1 வீல்பேஸ் கார் இந்​தி​யா​வில் அறிமுகம்
Updated on
1 min read

குருகிராம்: பிஎம்​டபிள்யு எக்​ஸ்1 லாங் வீல்​பேஸ் கார் இந்​தி​யா​வில் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தக் காரின் பெட்​ரோல் வகை சென்​னை​யில் உள்ள பிஎம்​டபிள்யு குழும தொழிற்​சாலை​யில் தயாரிக்​கப்​படு​கிறது.

இதற்​கான முன்​ப​திவு விநி​யோகஸ்​தர்​கள் மூலம் தொடங்கி உள்​ளது. இதன் அறி​முக விலை ஜிஎஸ்டி உட்பட ரூ.49.9 லட்​சம். சாலை வரி, டிசிஎஸ், ஆர்​டிஓ வரி, காப்​பீடு கட்​ட​ணம் தனி.

இதுகுறித்து பிஎம்​டபிள்யு குழுமத்​தின் இந்​திய பிரிவு தலை​வர் மற்​றும் தலை​மைச் செயல் அதி​காரி ஹர்​தீப் சிங் பிரார் கூறும்போது, “புதிய பிஎம்​டபிள்யு எக்​ஸ்1 வீல்​பேஸ் கார் இந்​தி​யா​வில் மிகச்​சிறப்​பான வெற்றி வரலாற்​றைப் படைத்​திருக்​கிறது. அதிக இடவச​தி, கூடு​தல் சவு​கரி​யம், அதிநவீன தொழில்​நுட்​பம், கம்​பீர​மான தோற்​றம் உள்​ளிட்ட அம்​சங்​கள் இதில் இடம்​பெற்​றுள்​ளன.

இந்​தப் பிரி​வில் மிக நீள​மான, மிக உயர​மான மற்​றும் அகல​மான கார் என்ற தனிச்​சிறப்​பைப் பெற்​றுள்​ளது. இது த​விர, பிஎம்​டபிள்யு கார்களுக்கே உரிய செயல்​திறன், ஓட்​டு​வ​தில் மகிழ்ச்சி ஆகிய அம்​சங்​களை தொடர்ந்து இது தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது” என்றார்.

பிஎம்டபிள்யு எக்ஸ்1 வீல்பேஸ் கார் இந்​தி​யா​வில் அறிமுகம்
இஸ்கான் ரத யாத்திரையில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in