ரூ.27,000 கோடி வங்கி மோசடி வழக்கு: மும்பையில் அனில் அம்பானி குழுமத்தின் 17 இடத்தில் சோதனை

அனில் அம்பானி

அனில் அம்பானி

Updated on
1 min read

மும்பை: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் ஏடிஏ குழும நிறு​வனங்​களுக்குச் சொந்தமான 17 இடங்​களில் சிபிஐ அதிகாரி​கள் நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

வங்​கி​களிடம் பெற்ற கடனைத் திசை திருப்​பிய​தாகக் கூறப்​படும் ரிலை​யன்ஸ் டெலி​காம், ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன்​ஸ், ரிலையன்ஸ் ஹோம் பைனானன்ஸ் ஆகிய நிறு​வனங்​களின் அலு​வல​கங்​கள் மற்​றும் இயக்​குநர்​களின் வீடு​களில் இந்​தச் சோதனை நடத்​தப்​பட்​டது. ஒரே முகவரி​யில் பல நிறு​வனங்​கள் இயங்கி வந்ததை சிபிஐ கண்​டு​பிடித்​துள்​ளது.

பொதுத்​துறை வங்​கி​கள் மற்​றும் எல்​ஐசி அளித்த புகார்​களின் அடிப்​படை​யில், அனில் அம்​பானி குழும நிறு​வனங்​கள் மீது இது​வரை 7 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

ரிலை​யன்ஸ் டெலி​காம், ரிலை​யன்ஸ் ஹோம் ஃபை​னான்ஸ் உள்​ளிட்ட நிறு​வனங்​கள் இதில் முக்​கிய​மாகச் சிக்​கி​யுள்​ளன. இந்த மோசடிகளால் இந்​திய வங்​கி​களுக்கு ஒட்​டுமொத்​த​மாக ரூ.27,337 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகச் சிபிஐ தெரி​வித்​துள்​ளது.

இந்த வழக்​கின் தீவிரத்​தைக் கரு​தி, முழு விசா​ரணை​யை​யும் உச்ச நீதி​மன்​றம் நேரடி​யாகக் கண்​காணித்து வரு​கிறது. ஏற்​கெனவே ஏப்​ரல் மாதத்​தில் இந்​தக் குழு​மத்​தைச் சேர்ந்த 2 உயர் அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் உள்​ளனர்.

கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களின் அடிப்​படை​யில், வரும் நாட்​களில் குழு​மத்​தின் முக்​கிய இயக்​குநர்​களிடம் நேரடி விசா​ரணை நடத்​தப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது அனில் அம்​பானி குழு​மத்​துக்கு மிகப்​பெரிய நெருக்​கடியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>அனில் அம்பானி</p></div>
இலங்கை கிரிக்​கெட் வாரிய உறுப்பினர் குழு​வில் குமார சங்ககாராவுக்கு இடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in