போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை

போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை
Updated on
1 min read

புதுடெல்லி: மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கண்டறியும் ஆய்வுகளின்போது போலி அல்லது ஜோடிக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இனி புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தடை விதிக்கும் வகையில் 'மருந்து விதிகள் 1945'-ல் மத்திய அரசு முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையின் மூலம் இப்புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய 'மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940' மற்றும் 'மருந்து விதிகள் 1945' ஆகியவற்றின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை போலி தகவல்களைத் தரும் நிறுவனங்களின் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அல்லது அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் நடைமுறை மட்டுமே இருந்தது.

போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை
ரூ.17,000 கோடி பயிர்க்கடன் முதல் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் வரை: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in