ரூ.17,000 கோடி பயிர்க்கடன் முதல் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் வரை: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் வினோத்.

சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் வினோத்.

Updated on
2 min read

சென்னை: தவெக அரசின் முதல் வேளாண் பட்​ஜெட்டை சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர் வினோத் நேற்று தாக்​கல் செய்​தார். நடப்பு ஆண்​டில் வேளாண்​மைத் திட்​டங்​களுக்​காக மொத்​தம் ரூ.58,374 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. விவ​சா​யிகளுக்கு ரூ.17,000 கோடி​யில் பயிர்க்​கடன் வழங்க இலக்கு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது என்று அவர் தெரி​வித்​தார்.

சட்டப்பேரவையில், 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான தவெக அரசின் முதல் வேளாண் பட்​ஜெட்டை வேளாண்​மை, உழவர் நலத் துறை அமைச்​சர் ஆர்​.​வினோத் நேற்று தாக்​கல் செய்​தார். காலை 9.31 மணிக்கு பட்​ஜெட் உரையைத் தொடங்கி 11.38 மணிக்கு நிறைவு செய்​தார்.

பட்​ஜெட் உரை​யில் அவர் கூறிய​தாவது: அறி​வியல் மற்​றும் நவீன தொழில்​நுட்​பங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட நிலை​யான வேளாண்​மையை உரு​வாக்​கு​வதே தவெக அரசின் நோக்​கம். உழவர் நலன், விவ​சா​யி​களின் வரு​மான உயர்​வு, நீர்வள மேம்​பாடு, இயற்கை வேளாண்மை மற்​றும் வேளாண் வணி​கம் ஆகிய​வற்​றுக்கு இந்த பட்​ஜெட்​டில் முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அடுத்த 5 ஆண்​டு​களில் உணவு தானிய உற்​பத்​தியை 131 லட்​சம் டன்​னாக உயர்த்​த​வும், நடப்பு ஆண்​டில் 125 லட்​சம் டன்னை எட்​ட​வும் இலக்கு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. வேளாண்​மைத் திட்​டங்​களுக்​காக நடப்பு ஆண்​டில் மொத்​தம் ரூ.58,374 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

விவ​சா​யிகளுக்கு நடப்பு ஆண்​டில் ரூ.17,000 கோடி​யில் பயிர்க்​கடன் வழங்​க​வும், கால்​நடை, மீன் மற்​றும் தேனீ வளர்ப்​புக்​கான குறுகிய​கால கடன்​களாக ரூ.3,000 கோடி வழங்​க​வும் இலக்கு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

மண் வளத்தை மேம்​படுத்த ‘தமிழ்​நாடு மண்​வளப் பாது​காப்பு இயக்​கம்’ எனும் ஐந்​தாண்டு திட்​டம் ரூ.600 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும். நடப்பு ஆண்​டில் இதற்கு ரூ.122 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

பட்ஜெட் சிறப்​பம்​சங்​கள்

பசுந்​தழைகளை மடக்கி உழுது மக்​கச்​செய்ய விவ​சா​யிகளுக்கு ஏக்​கருக்கு ரூ.3,000 வீதம் உழவு மானி​யம் வழங்​கப்​படும். இதற்​காக மாநில நிதி​யில் இருந்து ரூ.63.50 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

மண்​வளத்​தைப் பாது​காக்​க​வும், ரசாய​னப் பயன்​பாட்​டைக் குறைக்​க​வும் ஒரு லட்​சம் ஏக்​கருக்கு தேவை​யான திரவ உரம் வழங்க ரூ.4.50 கோடி ஒதுக்​கீடு.

உயிர்ம வேளாண்​மையை (ஆர்​கானிக்) பரவலாக்க, 20 ஆயிரம் ஏக்​கரில் உயிர்ம வேளாண் முறை​களைப் பின்​பற்​றும் விவ​சா​யிகளுக்கு ஏக்​கருக்கு ரூ.4 ஆயிரம் சிறப்பு ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். இதற்​காக ரூ.8 கோடி ஒதுக்​கீடு.

4 லட்​சம் விவ​சா​யிகளுக்கு மண்நல அட்​டைகள் வழங்க ரூ.10.16 கோடி​யும், நிரந்தர மண்​புழு உரக்​கூடங்​கள் அமைக்க ரூ.10 கோடி​யும் ஒதுக்​கீடு.

நெல், பருத்தி உள்​ளிட்ட பயிர்​களில் 10 லட்​சம் விவ​சா​யிகளுக்கு சான்று விதைகள் வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

வேளாண் இயந்​திரங்​கள், கருவி​கள் வாங்க 24,000 விவசாயிகளுக்கு ரூ.227 கோடி மானி​யம் அளிக்​கப்​படும்.

வேளாண் நடை​முறை​களை தொடக்​கம் முதல் நிறைவு வரை இயந்​திரப்​படுத்​தும் நோக்​கில் மக்​காச்​சோளம், வேர்க்​கடலை உள்​ளிட்ட பயிர்​களுக்கு 225 ஏக்​கரில் நிபுணர்​கள் மூலம் பயிற்சி அளிக்க ரூ.46.30 லட்​சம் ஒதுக்​கீடு.

‘வெற்றி வான்​மகள்’ திட்​டத்​தின் கீழ் 100 மகளிர் உள்​ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் பயிற்சி வழங்க ரூ.1.50 கோடி​யும், பயிற்சிபெற்ற பிறகு ட்ரோன் வாங்க 50 மகளிருக்கு 50 சதவீத மானிய​மாக ரூ.2.50 கோடி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

சர்​வ​தேச ஏற்​றுமதி சந்​தை​யுடன் 1,000 விவ​சா​யிகளை இணைக்க ரூ.6 கோடி​யில் 4 மையங்​கள் அமைக்​கப்​படும். இதன்​மூலம் மா, மஞ்​சள், மிள​காய் ஏற்​றும​திக்​கான தொழில்​நுட்ப வசதி​கள் செய்து தரப்​படும்.

தென்னை விவ​சா​யி​களின் நலனுக்​காக ரூ.16 கோடி ஒதுக்​கப்​படு​கிறது. இதில் தென்னை நோய் தடுப்பு திட்​டத்​துக்கு ரூ.1 கோடி​யும் அடங்​கும். நிலை​யான சந்​தை​வாய்ப்பை உரு​வாக்க ரூ.22.30 கோடி​யில் ‘தென்னை பதப்​படுத்​தும் கழகம்’ அமைக்​கப்​படும்.

500 நடுத்தர பால் பண்​ணை​கள் அமைக்க மானி​யம் மற்​றும் கடனுத​வி, 50,000 கன்​றுகளுக்கு தாது உப்​புக் கலவை வழங்க மானி​யம் வழங்​கப்​படும்.

வறட்​சித் தணிப்​புத் திட்​டங்​களுக்கு மாநில பேரிடர் நிதி​யில் இருந்து ரூ.111 கோடி​ ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

விவ​சா​யிகள் வரு​மான மேம்​பாட்டு ஆணை​யம், வேளாண் வணிக வழி​காட்டு மையம் அமைக்​கப்​படும்.

இவ்​வாறு அமைச்சர் வினோத் தெரி​வித்​தார். கழுத்தில் பச்சைத் துண்டு அணிந்து அவர் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். ரூ.58,374 கோடிக்கு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் வேளாண் பட்ஜெட்டின் மதிப்பு ரூ.45,661 கோடி. அதை விட ரூ.12,713 கோடி கூடுதலாக இந்த ஆண்டில் வேளாண் பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்​ஜெட் மீதான விவாதம் சட்​டப்​பேர​வை​யில் இன்று முதல் தொடங்க உள்​ளது.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் வினோத்.</p></div>
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in