தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சார்பில் பிளிங்கிட் ஊழியருக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசு - நெகிழ்ச்சி வீடியோ வைரல்

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சார்பில் பிளிங்கிட் ஊழியருக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசு - நெகிழ்ச்சி வீடியோ வைரல்
Updated on: 
1 min read

மும்பை: மும்​பையில் வறுமை காரண​மாக சைக்​கி​ளில் சென்று டெலிவரி செய்து வந்த ‘பிளிங்கிட்’ டெலிவரி ஊழியர் ஒரு​வருக்கு, மும்​பையைச் சேர்ந்த சமூக வலை​தள பிரபலம் ஹுசைன் மன்சூரி புதிய ஸ்கூட்​டரை பரிசளித்​தார்.

இது தொடர்​பான நெகிழ்ச்​சி​யான வீடியோவை ஹுசைன் மன்சூரி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்​தார். அதில், ”டெலிவரி ஊழியர் (சுஜீத்) ஒரு ஆர்​டரை டெலிவரி செய்ய சைக்​கி​ளில் சென்​று கொண்​டிருந்​த​போது மன்​சூரி அவரை வழிமறித்து பேசுகிறார். அவரிடம் ஏன் இன்​னும் மோட்​டார் சைக்​கிள் வாங்​க​வில்லை? என கேட்​கிறார். அதற்கு சுஜீத், “சார், இவ்​வளவு குறைந்த வருமானத்தில் என்​னால் எப்​படி ஒரு மோட்​டார் சைக்​கிள் வாங்க முடியும்” எனக் கூறுகிறார்.

அதன் பிறகு மன்​சூரி, டெலிவரியை முடித்​து​விட்​டுத் திரும்பி வாருங்​கள் என சுஜீத்​திடம் தெரி​விக்​கிறார். அதன்​படி அவர் திரும்பி வந்​ததும், ​​மன்​சூரி அவரது கண்​களைக் கட்டி அழைத்​துச் சென்று, இது ஆனந்த் அம்​பானி​யின் சிறிய பரிசு எனக்​கூறி புதிய ஸ்​கூட்​டரை அவருக்கு பரிசளிக்​கிறார். இதைப் பார்த்து மிகவும் உணர்ச்​சிவசப்​பட்ட சுஜீத், மன்​சூரியைக் கட்​டிப்​பி​டித்​துக் ஆனந்தக் கண்ணீர்விட்டபடி, அவருக்கு நன்றி தெரி​விக்​கிறார்.

இந்த வீடியோவை 4.6 கோடிக்​கும் அதி​க​மானோர் பார்​த்துள்ளனர். மேலும் பார்​வை​யாளர்​களிட​மிருந்து பெரும் பாராட்​டையும் பெற்றுள்​ளது. தொழிலதிபர் ஆனந்த் அம்​பானி​யின் பிறந்​தநாள் கொண்​டாட்​டங்​களை முன்​னிட்டு, ஆனந்த் சேவா அறக்​கட்​டளை சமூக வலைத்​தள பிரபலங்​களாக ரஹூல் கனல் மற்​றும் ஹுசைன் மன்​சூரி ஆகியோ​ருடன் இணைந்து மும்​பையைத் தினமும் இயங்க வைக்க உதவும் அதன் கடின உழைப்பாளிகளுக்கு மின்​சார ஸ்​கூட்​டர்​களை வழங்கி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சார்பில் பிளிங்கிட் ஊழியருக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசு - நெகிழ்ச்சி வீடியோ வைரல்
கவுன்ட்டர்களில் ரயில் டிக்கெட் வாங்கினாலும் ‘பயணக் காப்பீடு’ - 45 பைசாவுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in