இந்தியாவில் ரூ.2,800 கோடி முதலீடு: அமேசான் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் ரூ.2,800 கோடி முதலீடு: அமேசான் நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் தனது விநி​யோகக்கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​த​வும், ஊழியர்​களின் நலன் சார்ந்த திட்​டங்​களை விரிவுபடுத்​த​வும் ரூ.2,800 கோடிக்​கும் அதி​க​மான தொகையை முதலீடு செய்ய உள்​ள​தாக அமே​சான் இந்​தியா நிறு​வனம் தெரி​வித்​துள்ளது.

இதுகுறித்து அமே​சான் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் 2030-ம் ஆண்​டுக்​குள் 35 பில்​லியன் டாலர் (சு​மார் ரூ. 3 லட்​சம் கோடி) முதலீடு செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, தற்​போது ரூ.2,800 கோடி (300 மில்​லியன் டாலர்) முதலீடு மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இந்​தத் தொகை​யானது அமே​சான் நிறு​வனத்​தின் விநி​யோக மையங்​களை வலுப்​படுத்​த​வும், வாடிக்​கை​யாளர்​களுக்கு அதிவேக​மாகப் பொருட்​களை விநி​யோகிக்​கும் குயிக் காமர்ஸ் சேவையை விரிவுபடுத்​த​வும் பயன்​படுத்​தப்​படும்.

ஊழியர்கள் பாதுகாப்பு, உடல்நலம் முதலீட்​டின் மற்​றொரு முக்​கியப் பகு​தி​யாக, ஊழியர்​களின் பாது​காப்​பு, உடல்​நலம் மற்​றும் நிதி சார்ந்த நலத் திட்​டங்​கள் மேம்​படுத்​தப்பட உள்​ளன. குறிப்​பாக, ‘பு​ராஜெக்ட் ஆஷ்ரே’ போன்ற நலத்​திட்​டங்​கள், மருத்​துவ மற்​றும் விபத்​துக் காப்​பீட்டு வசதி​கள் போன்​றவை விரிவு படுத்​தப்​படும். கடந்த 2025-ம் ஆண்​டில் அமே​சான் நிறு​வனம் மேற்​கொண்ட ரூ.2,000 கோடி முதலீட்​டின் மூலம், இந்​தி​யா​வில் 17 புதிய சேமிப்​புக் கிடங்​கு​கள், 6 தரம் பிரிக்​கும் மையங்​கள் மற்​றும் 75 விநி​யோக நிலை​யங்​கள் உரு​வாக்​கப்​பட்​டன.

இதுகுறித்து அமே​சான் இந்​தியா மற்​றும் ஆஸ்​திரேலியா மண்டல செயல்​பாட்​டுத் துறை துணைத் தலை​வர் அபினவ் சிங் கூறுகை​யில், “அமே​சான் 2013-ல் இந்​தி​யா​வில் கால் பதித்​தது முதல், நாட்​டின் அனைத்து பகு​தி​களுக்​கும் சேவையை வழங்​கும் வகை​யில் பாது​காப்​பான மற்​றும் நம்​பக​மான கட்​டமைப்பை உரு​வாக்​கி​யுள்ளோம்.

எங்​களது இந்த வெற்​றிக்​குக் காரண​மான ஊழியர்​களின் நலனை உறுதி செய்​வதே எங்​களது முதன்மை நோக்​கம்.புதிய முதலீட்​டின் மூலம் தொழில்​ நுட்ப வசதி​கள் மேம்​படுத்​தப்​பட்​டு, வாடிக்​கை​யாளர்​களுக்கு இன்​னும் வேக​மாக​வும் பாது​காப்​பாக​வும் பொருட்​கள் சென்​றடைய வழி​வகை செய்​யப்​படும்” என்​றார்.

இந்தியாவில் ரூ.2,800 கோடி முதலீடு: அமேசான் நிறுவனம் அறிவிப்பு
“தரம் தாழ்ந்த பேச்சு” - ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in