“தரம் தாழ்ந்த பேச்சு” - ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்

“தரம் தாழ்ந்த பேச்சு” - ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில், இந்தியா குறித்துக் குறிப்பிடும்போது ‘நம் கிரகத்தில் இருக்கும் நரகப் படுகுழி’ என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். இது இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவுன் நட்பு நாடாக கருதப்படும் இந்தியா குறித்து ட்ரம்ப் இவ்வாறு பேசியது சர்வதேச அளவிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த பேச்சு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் அந்த விமர்சனங்களையும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பிந்தைய அறிக்கையையும் கவனித்தோம்.

இந்தத் தரம் தாழ்ந்த கருத்துக்கள் வெளிப்படையாகவே எவ்வித தகவலுமற்ற மற்றும் பொருத்தமற்ற ஒன்றாகவே உள்ளன. நீண்டகாலமாகப் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-அமெரிக்க உறவின் யதார்த்தத்தை இவை நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த கருத்து சர்ச்சையான நிலையில், , அதனால் ஏற்பட்ட தூதரக ரீதியான பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வாஷிங்டன் இறங்கியுள்ளது. "இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும், அந்த நாட்டின் தலைமையில் எனது மிகச் சிறந்த நண்பர் ஒருவர் இருக்கிறார் என்றும் அதிபர் ஏற்கனவே கூறியுள்ளார்" என்று தெரிவித்துள்ளது. 

“தரம் தாழ்ந்த பேச்சு” - ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்
“ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” - சாதனை வாக்குப்பதிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in