போலி பிரசாதம் விற்ற அமேசானுக்கு அபராதம்

போலி பிரசாதம் விற்ற அமேசானுக்கு அபராதம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமேசான் தளத்தில் 'சந்து டிரேடிங் கம்பெனி' என்ற விற்பனையாளர், ‘பிஹார் பிரதர்ஸ்’ பிராண்டின் கீழ் நெய் லட்டு, கோவா (பால்) லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசுவின் பால் பேடா ஆகிய நான்கு வகை இனிப்புகளை ராமர் கோவில் பிரசாதம் எனத் தவறாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்துள்ளார்.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடந்த ஜனவரி 2024-ல் அளித்த புகாரின் அடிப்படையில், அமேசான் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் அமேசான் நிறுவனம் செலுத்த வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

போலி பிரசாதம் விற்ற அமேசானுக்கு அபராதம்
தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: கோவளத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in