அடோப் நிறுவன சி.இ.ஓ சாந்தனு பதவி விலகல்

சாந்தனு நாராயண்

சாந்தனு நாராயண்

Updated on
1 min read

வாஷிங்டன்: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ‘அடோப்’ -யின் தலைமைச் செயல் அதிகாரியாக 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அடோப் நிறுவனம், சாந்தனுவின் விலகலை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்.

பணி விலகல் குறித்து ஊழியர்களுக்கு சாந்தனு அனுப்பிய செய்தியில், “நான் பொறுப்பேற்றபோது 3,000-ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 30,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நிறுவன வருவாய் தற்போது 25 பில்லியன் டாலராக (ரூ. 2 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. நாம் இணைந்து சாதித்ததில் பெருமிதம் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>சாந்தனு நாராயண்</p></div>
கட்சி மாறி வாக்களிக்கும் அச்சம்: கர்நாடகாவுக்கு 8 எம்எல்ஏவை அனுப்பிய ஒடிசா காங்கிரஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in