கட்சி மாறி வாக்களிக்கும் அச்சம்: கர்நாடகாவுக்கு 8 எம்எல்ஏவை அனுப்பிய ஒடிசா காங்கிரஸ்

ஒடிசா காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள்

ஒடிசா காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள்

Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

நான்காவது இடத்துக்கு பாஜக ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திலீப் ரே மற்றும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே போட்டி நிலவுகிறது. 14 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி பிஜு ஜனதா தளம் வேட்பாளரை ஆதரிக்கிறது.

இந்த சூழலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவர்களை கர்நாடகாவுக்கு காங்கிரஸ் மாற்றியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் ராமச்சந்திர கடம் கூறுகையில், “பாஜகவின் குதிரை பேர முயற்சியில் இருந்து பாதுகாக்கவே எங்கள் எம்எல்ஏ-க்கள் 8 பேர் பெங்களூரு சென்றுள்ளனர்” என்றார். பெங்களூரு அருகே 35 கி.மீ. தொலைவில் ஒரு கேளிக்கை பூங்கா விடுதியில் இவர்கள் தங்கியுள்ளனர்.

<div class="paragraphs"><p>ஒடிசா காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள்</p></div>
அமெரிக்க ராணுவ விமானம் இராக்கில் விழுந்து சிதறியது: 4 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in