Published : 24 May 2023 10:14 AM
Last Updated : 24 May 2023 10:14 AM

மே 24, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 24) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் மே.3 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து மறுநாள் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.

இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,665-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,072-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,500 ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x