Published : 26 Apr 2023 07:45 AM
Last Updated : 26 Apr 2023 07:45 AM

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சார்பில் புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வாகனம் அறிமுகம்

சென்னை: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் நேற்று அனைத்தும் புதிய பொலேரோ மேக்ஸ் (Bolero MaXX) பிக்-அப் வரிசையை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.7.85 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இலகுவான, மிகவும் கச்சிதமான மற்றும் பல பயன்பாடுகளைக் கொண்ட இந்த புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வாகனம் சுமக்கும் திறன், எரிபொருள் திறன், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த ஓட்டுநர் அனுபவத்துக்கான புதிய தரநிலைகளை அமைக்கிறது.

புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசையை குறைந்தபட்ச முன்பணமான ரூ.24,999-ஐ செலுத்தி முன்பதிவு செய்யலாம். இப்புதிய வாகனமும் வலிமை, கடினத்தன்மை, நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் அதிக மறு விற்பனை மதிப்பு ஆகியவற்றை வழங்குவதாக உள்ளது.

இதில் உள்ள சக்திவாய்ந்த வாகன மேலாண்மை தொழில்நுட்பம் மூலம் 6 மொழிகளில் மொபைல் பயன்பாட்டில் அணுகக்கூடிய 50-க்கும் மேற்பட்ட அம்சங்களானது, வாகன கண்காணிப்பு, பாதை திட்டமிடல், செலவு மேலாண்மை, ஜியோ-ஃபென்சிங் மற்றும் வாகன பராமரிப்பு கண்காணிப்பு ஆகியவற்றுக்கான முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா, ஆட்டோ மோட்டிவ் பிரிவு தலைவர் வீஜய் நக்ரா கூறுகையில், ``மேக் இன் இந்தியா முயற்சியில் ஆழ்ந்த உறுதியுடன் உள்ள நிறுவனமாக, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இப்புதிய வாகனம் அதிநவீன அம்சங்கள், ஒப்பிட முடியாத ஆற்றல், அதிகபட்ச சுமந்து செல்லும் திறன் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றை வழங்கி, ஒவ்வொரு பயணமும் பயனளிப்பதாக மற்றும் ஓட்டுநர்களுக்கு சோர்வு இல்லாத தன்மையை அளிக்கிறது'' என்றார்.

மஹிந்திரா & மஹிந்திரா ஆட்டோ மோட்டிவ் டெக்னாலஜி மற்றும் ப்ராடக்ட் டெவலப்மென்ட் தலைவர் ஆர்.வேலுசாமி கூறுகையில், "புதிய பொலேரோ மேக்ஸ் பயன்பாட்டு வாகனமாகவும், 2 டன் வரையிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.

டீசல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் வகைகள் உள்ளன'' என்றார். இந்த பிராண்ட் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மஹிந்திரா 2 மில்லியனுக்கும் அதிகமான பிக்-அப் வாகனங்களை விற்றுள்ளது. இப்புதிய பிக்-அப் வரிசையானது, எச்டி தொடர்கள் மற்றும் சிட்டி சீரிஸ் ஆகிய 2 தொடர்களில் வருகிறது.

மேலும் அதிக சுமை சுமக்கும் திறன், சிறந்த மைலேஜ், செயல்திறன், மேம்பட்ட வசதி, பாதுகாப்பு, மிகவும் நம்பகமான மற்றும் திறமையான போக்குவரத்து தீர்வை வழங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x