Published : 13 Sep 2017 09:45 AM
Last Updated : 13 Sep 2017 09:45 AM

ரூ.2,500க்கு ஏர்டெல் ஸ்மார்ட்போன்

ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனம் ரூ.2,500 விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை வெளியிடுவதற்கான முயற்சிகளில் உள்ளது. இதற்காக செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ஏர்டெல் குறைந்த விலையில் கவர்சிகரமான டேட்டா சேவைகள், குரல் வழி சேவைகளுடன் ஸ்மார்ட்போனை தீபாவளிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போன் விலை ரு.2,500 முதல் ரூ.2,700க்குள் இருக்கும்.

1ஜிபி ராம், இரண்டு சிம் கார்டு, 4 அங்குல திரை, முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமராக்களுடன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை இந்த போன் கொண்டிருக்கும். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x