Published : 17 Apr 2023 10:54 AM
Last Updated : 17 Apr 2023 10:54 AM

ஏப்.17, 2023 | தங்கம் விலையில் மாற்றமில்லை; சவரனுக்கு ரூ..45,200-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.17) எந்தவித மாற்றமுமின்றி சவரன் ரூ.45,200-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை, வெள்ளிக்கிழமை சவரன் 45,760-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது. அடுத்தநாள் சவரனுக்கு,ரூ.560 குறைந்து ரூ.45,200 க்கு விற்பனையானது

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.5,650-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.45,200-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,864-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.81,600-ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x