Published : 08 Apr 2023 10:46 AM
Last Updated : 08 Apr 2023 10:46 AM

ஏப் 8, 2023 | தங்கம் விலையில் மாற்றமில்லை; சவரன் ரூ.45,120 விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.8) எந்தவித மாற்றமுமின்றி சவரன் ரூ.45,120-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை புதன்கிழமை வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் தொடர்கிறது. இதன்படி கிராம் ரூ.5,640-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.45,120-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,056-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,200-ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x