Published : 19 Jul 2014 11:58 AM
Last Updated : 19 Jul 2014 11:58 AM

ராஜேஷ் கோபிநாதன் - இவரைத் தெரியுமா?

$ இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் துணைத்தலைவர்.

$ டிசிஎஸ் நிறுவனத்தில் 2001ம் ஆண்டு சேர்ந்தார். 2013 பிப்ரவரியில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது பிபிஓ பிஸினஸ், இந்தியா பிஸினஸ் பகுதி மற்றும் வங்கி சாப்ட்வேர் ஆகிய பிரிவுகளைக் கவனித்து வருகிறார்.

$ சிஎப்ஓ-வாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பிஸினஸ் பைனான்ஸ் பிரிவின் துணைத்தலைவராக இருந்தார்.

$ 2001ம் ஆண்டு டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து டிசிஎஸ் நிறுவனத்துக்கு வந்தவர். வந்தவுடன் அமெரிக்காவில் புதிதாக தொடங்கப்பட்ட இ-பிஸினஸில் வேலை பார்த்தார். மேலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும் கூட.

$ 1971ம் ஆண்டு பிறந்த இவர், திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் (தற்போது என்ஐடி) எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும், ஐஐஎம் ஆமதாபாதில் நிர்வாகப்படிப்பும் பயின்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x