Published : 17 Mar 2023 10:36 AM
Last Updated : 17 Mar 2023 10:36 AM

மார்ச் 17, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.43,600 -க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. முந்தைய வாரங்களில் இறங்குமுகமாக இருந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.360 அதிகரித்திருந்தது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,450-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600 -க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,496 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.73,100-ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x