Published : 01 Mar 2023 06:32 PM
Last Updated : 01 Mar 2023 06:32 PM

ஏர்டெல் விரைவில் கட்டணத்தை உயர்த்த திட்டம்: உறுதி செய்த சுனில் மிட்டல்

சுனில் மிட்டல் | கோப்புப்படம்

பார்சிலோனா: கூடிய விரைவில் ஏர்டெல் டெலிகாம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் உறுதிபட தெரிவித்துள்ளார். இதனை பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்திய நாட்டில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ளது ஏர்டெல் நிறுவனம். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் முறையில் பயனர்களுக்கு இந்நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. கடந்த டிசம்பரில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.99-ல் இருந்து ரூ.155 என உயர்த்தியது. தொடர்ந்து கடந்த ஜனவரியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு டெலிகாம் வட்டாரத்தில் இதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கட்டண உயர்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

“டெலிகாம் துறை சரந்து பெரிய அளவில் மூலதன முதலீடு மேற்கொண்டுள்ளோம். இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. அதை மாற்ற வேண்டும். அதன் காரணமாக சிறிய அளவில் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அநேகமாக இது நடப்பு ஆண்டின் மத்தியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பயனர்கள் தாங்கள் செலுத்தும் தொகையை விடவும் அதிகளவுக்கு டேட்டாவை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x