Published : 04 May 2017 10:34 AM
Last Updated : 04 May 2017 10:34 AM

இறக்குமதியை சமாளிக்க அரசு உதவ வேண்டும்: உருக்கு அச்சு துறையினர் கோரிக்கை

உள்நாட்டு உருக்கு அச்சு தொழிலை (பவுண்ட்ரி) மேம்படுத்த வேண்டுமெனில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என உருக்கு அச்சு துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். சீனாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், அதை சமாளிக்க அரசு தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

காற்றாலை தொழில்துறையினர் அதிக அளவில் இறக்குமதி செய்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசின் உதவியால், உள்நாட்டு காற்றாலை தொழில்துறையினர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து தங்களது டர்பன்களை கட்டமைக்கின்றனர். உருக்கு உற்பத்திக்கான செலவில் சீனாவுடன் ஒப்பிடுகிறபோது 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளது.

மத்திய அரசு உள்நாட்டு உருக்கு துறைக்கு அதிகபட்சமாக விலக்குகள் அளிக்க வேண்டும். சீனா உருக்குக்கு இணையான விலையில் உள்நாட்டு உற்பத்தி யாளர்களாலும் கொடுக்க முடியும். ஆனால் மானியம் சவாலாக இருக்கிறது. சீனா பல திட்டங்களில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு சீன நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு சலுகைகள் வழங்குகிறது என்று இந்திய உருக்குத் தொழிலாளர் நிறுவனத்தின் செயலாளர் நித்யா னந்தா தேவராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தொழில்துறை யினர் கூறும்போது, மத்திய அரசு தங்களது திட்டங்களிலிலிருந்து இறக்குமதி செயயப்படும் பாகங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். காற்றாலை தயாரிப்பாளர்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு பாகங்களை வாங்குவதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் உருக்கு அச்சு துறை பிரிவின் செயல் இயக்குநர் என். நரசிம்மன் கூறினார்.

2016-ம் ஆண்டில் காற்று டர்பைன் துறைக்கு 1,20,000 டன் தேவை என கணக்கிடப்பட்டது இதன் மதிப்பு ரூ.1,500 கோடியாகும். ஆனால் காற்றாலை துறையினர் சுமார் ஒரு லட்சம் டன் அளவுக்கு சீனா உருக்கை பயன்படுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x