Published : 07 Jan 2023 06:35 AM
Last Updated : 07 Jan 2023 06:35 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.304 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று திடீரென ஒரு பவுன் ரூ.304 குறைந்துரூ.41,520-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் ரூ.40,992-க்கு விற்பனையானது. மறுநாள் 23-ம் தேதி இது ரூ.40,528 ஆககுறைந்தது. பின்னர், 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ரூ.40,608 முதல் ரூ.40,688 என்ற விலைக்குள் விற்பனையாகி வந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த மாதம் 28-ம் தேதிஒரு பவுன் ரூ.40,840-க்கு விற்பனையாது. 30-ம் தேதி ரூ.40,920 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று திடீரென குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.38 குறைந்துரூ.5,190-க்கு விற்பனைஆகிறது. பவுனுக்கு ரூ.304குறைந்து ரூ.41,520-க்குவிற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம்ரூ.44,416-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.73.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.73,500 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x