Published : 16 Dec 2022 06:00 AM
Last Updated : 16 Dec 2022 06:00 AM

டெஸ்லாவின் ரூ.29,500 கோடி பங்குகளை விற்றார் எலான் மஸ்க்

கலிபோர்னியா: எலான் மஸ்க் கடந்த மூன்று நாட்களில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் 3.58 பில்லியன் டாலர் (ரூ.29,500 கோடி) மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளார். எந்த நோக்கத்துக்காக இந்தப் பங்குகளை விற்றார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.6 லட்சம் கோடி) வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தார். பல்வேறு சிக்கலுக்குப் பிறகு, இறுதியாக ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் அவர் கையகப்படுத்தினார். இதற்கான தொகையை செலுத்துவதற்காக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை அவர் விற்றுவருவதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் 23 பில்லியன் டாலர் (ரூ.1.8 லட்சம் கோடி) மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 3,500 ஊழியர்களுக்கு மேல் அவர் பணிநீக்கம் செய்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த செயலால் சர்வதேச அளவில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

எலான் மஸ்க்கின் மீது பொதுத்தளத்தில் அதிருப்தி அதிகரிப்பது டெஸ்லா நிறுவனத்தின் மீதான மதிப்பைக் குறைக்கும் என்றும் இதனால் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x