Published : 06 Jul 2014 03:55 PM
Last Updated : 06 Jul 2014 03:55 PM

ஆட்டோமொபைல் துறை புத்துயிர் பெறும்

நடப்பு நிதி ஆண்டில் ஆட்டோ மொபைல் துறை புத்துயிர் பெறும் என்று டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆட்டோ மொபைல் துறைக்கு மிகப் பெரும் சரிவை அளித்த ஆண்டாக அமைந்தது. ஆனால் இந்த ஆண்டு சரிவிலிருந்து மீண்டு லாபம் ஈட்டுவதற்கான அறி குறிகள் தென்படத் தொடங்கி யுள்ளதாக அவர் கூறினார்.

நிறுவனத்தின் பங்குதாரர் களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், நடப்பு நிதி ஆண்டின் பிற்பாதியில் ஆட்டோமொபைல் துறை லாபகரமானதாக இருக்கும் என்றும் இதற்கு ஏற்றாற் போல அரசும் சில கொள்கை மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அதிகரித்த பணவீக்கம், கடனுக்கான வட்டி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் வாடிக்கை யாளர்கள் புதிய வாகனங்களை வாங்குவதைத் தவிர்த்தனர். இதனால் ஆட்டோமொபைல் துறையில் தேக்கம் ஏற்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்க வாகன விற்பனையும் கடந்த ஆண்டு சரிவைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த நிதி ஆண்டின் பிற்பாதியில் இத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உற்பத்தி வரிச் சலுகை அளித்தது, சுரங்கத் தொழில் மீதான தடையை விளக்கியது ஆகிய நடவடிக்கைகளால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x