Published : 06 Sep 2022 08:41 PM
Last Updated : 06 Sep 2022 08:41 PM

உரிமை கோராப்படாத இன்ஷூரன்ஸ் தொகையை என்ன செய்கிறது மத்திய அரசு?

உலக அளவில் காப்பீட்டுச் சந்தையில் முதல் 10 பெரிய சந்தைகளுள் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவில் எல்ஐசி உள்ளிட்ட 20 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. 34 ஆயுள் காப்பீடு இல்லாத காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஆயுள் காப்பீடு எடுத்துள்ளனர். ஆனால், காப்பீடு எடுத்தவர்களில் ஒருவர் சிலர் முழுக் காலம் வரை காப்பீட்டு தொகை செலுத்துவது இல்லை. மேலும், ஒரு சிலர் தங்களின் காப்பீட்டு தொகைக்கு உரிமை கோராமல் உள்ளனர்.

இவ்வாறு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் உரிமை கோராமல் உள்ள காப்பீடுகளின் மொத்தம் மதிப்பு ரூ.1723.2 கோடியாகும். இதன்படி 2017-18ம் ஆண்டு 48.95 கோடி ஆயுள் காப்பீடுகள் மற்றும் 32.67 கோடி ஆயுள் அல்லாத மற்ற காப்பீடுகளும், 2018-19ம் ஆண்டில் 366.24 கோடி ஆயுள் காப்பீடுகளும், 32.7 கோடி ஆயுள் அல்லாத மற்ற காப்பீடுகளும், 2019-20ம் ஆண்டில் 188.73 ஆயுள் காப்பீடுகளும், 36.32 கோடி ஆயுள் அல்லாத மற்ற காப்பீடுகளும், 2020-21ம் ஆண்டில் 336.89 ஆயுள் காப்பீடுகளும், 52 கோடி ஆயுள் அல்லாத காப்பீடுகளும், 2021-22ம் ஆண்டில் 557.25 கோடி ஆயுள் காப்பீடுகளும், 71.44 கோடி ஆயுள் அல்லாத காப்பீடுகளும் 10 ஆண்டுகளுக்கு மேல் உரிமை கோரப்படாமல் உள்ளது.

இதன்படி 2017-18ம் ஆண்டில் ரூ.81.62 கோடி, 2018-19ம் ஆண்டில் ரூ.398.94 கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ.225.05 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.388.89 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.628.69 என்று மொத்தம் ரூ.1723.2 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.

இந்த நிதியானது விதிகளின்படி மத்திய அரசின் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டு நலத் திட்ட உதவிகளுக்கு செலவு செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x