Published : 12 May 2016 09:57 AM
Last Updated : 12 May 2016 09:57 AM

`கால் டிராப்’புக்கு அபராதம் செலுத்தத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செல்போன்களில் ஒரு அழைப் பினை பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த அழைப்பு திடீரென துண்டிக்கப்படும் போது, அதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு ரூ.1 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 முறை துண்டிக்கப் படும் போது ரூ.3 வாடிக்கையா ளர்களுக்கு செலுத்த வேண்டும் என்று இந்திய தொலைத்தொ டர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்தாண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு கடந்த ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் டிராய் கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரியில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டிராய் அமைப் பின் உத்தரவை உறுதி செய்தது.

இதையடுத்து இவ்வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதி மன்றம், கால் டிராப் ஆவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அபராதம் கட்டத் தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. டிராயின் உத்தரவில் வெளிப்படைத்தன்மை இல்லை மற்றும் அபராதம் விதிப்பதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங் கள் கூறும்போது, இணைப்பு துண்டிக்கப்படுவது என்பது எங்க ளுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த 15 மாதங்களில் 2 லட்சம் செல்போன் கோபுரங்கள் அமைத் திருக்கிறோம் என்று கூறியுள்ளன. டிராய் கூறும்போது, டெலிகாம் நிறுவனங்கள் அதிக வருமானத்தை பெறுகின்றன, ஆனால் கட்டுமா னத்துக்கான அதிக முதலீடு அவர் கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, இந்தியாவின் ஒவ்வொரு பகுதி யிலும் சேவை வழங்க திட்டமிடும் நிறுவனங்கள், ஏன் சேவையின் தரத்தை உயர்த்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

சி.கே.மதிவாணன் தலைவர், பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு

கால் டிராப் ஆவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கால் டிராப் ஆவதற்காக அபராதம் வசூலிப் பது தேவையில்லாதது. ஆயிரம் பேருக்கு சேவை வழங்கக்கூடிய செல்போன் டவரில் 2 ஆயிரம் பேர் அதனை பயன்படுத்தும்படி ஓவர் லோட் செய்வது, டவரை சரியாக பராமரிக்காதது போன்ற காரணங்களால் தான் கால் டிராப் ஆகிறது. அபராதம் கட்டத்தேவை யில்லை என்று சொன்ன உச்ச நீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறு வனங்கள் தங்களது கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்க வேண்டும்.

எஸ். சரோஜா உறுப்பினர், ட்ராய் நுகர்வோர் பாதுகாப்புக் குழு

கால் டிராப் என்பது மிக முக்கியமான பிரச்சினையாகவுள்ளது. வாடிக்கையாளர்களை சுரண்டுகிற மிகப்பெரிய விஷயம்தான் இந்த கால் டிராப். வாடிக்கையாளர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் போது, அழைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் வாடிக்கையாளரின் செல்போனில் கோளாறு இருந்தால் அழைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் கூறி வருகின்றன. ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சேவைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். கால் டிராப் ஆவதற்கு அபராதம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது துரதிர்ஷ்டவசமானதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x