Published : 15 Apr 2022 01:18 PM
Last Updated : 15 Apr 2022 01:18 PM

அறிமுகமானது மாருதி சுசுகி எர்டிகா 2022: விலை மற்றும் அம்சங்கள்

எர்டிகா (கோப்புப்படம்)

புதுடெல்லி: மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா 2022 மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் பயணிகள் கார் சந்தையில் 44 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் மல்டி-பர்போஸ் வாகன பிரிவில் இந்த நிறுவனத்தின் எர்டிகா கார் மிகவும் பிரபலம். தற்போது எர்டிகா 2022 மாடல் கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. நியூ ஜெனரேஷன் மாடல் காராக புதிய எர்டிகா வெளிவந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்டுகளில் இந்த கார் கிடைக்கிறது. புதுவிதமான எஞ்சின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாதிரியானவை இதில் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் முந்தைய மாடலின் டிசைனை அப்படியே அச்சு எடுத்துள்ளது. முன்பக்கத்தில் உள்ள கிரில் மட்டுமே மாற்றம் கண்டுள்ளது. உட்புற தோற்றத்திலும் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் முன்புறத்தில் டியூயல் ஏர் பேக்ஸ், ஏபிஎஸ், ரிவர்ஸ் சென்சார், வேகம் தொடர்பான அலார்ம் மாதிரியானவை உள்ளது. உயர்ரக வேரியண்டுகளில் நான்கு ஏர் பேக்ஸ் இடம்பெற்றுள்ளது. ‘கே’ சீரிஸ் டியூயல் ஜெட், டியூயல் விவிடி எஞ்சின் இதில் உள்ளது.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸமிஷனில் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் மைலேஜ் இதில் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியண்டில் 26 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப விலை 8.35 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகும். இது முந்தைய மாடல் எர்டிகாவை காட்டிலும் சற்று அதிகம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. விரைவில் இதன் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x